Category Wise List of Proverbs in Tamil and English

தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)

Proverbs in Tamil and English: நாம் அனைவரும் தமிழ் பழமொழிகளை கடைபிடித்தால் வாழ்க்கையில் நல் ஒழுக்கத்துடன் வாழமுடியும்.  150  கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. Category wise list in Tamil Proverbs.

அச்சம் (FEAR)

  • அச்சத்தில் காதுகள் கூர்மையானவை. (Fear has a quick ear)
  • அச்சத்திற்கு மருந்தில்லை. (There is no medicine for fear)
  • அச்சம் அனைத்தும் தளையே. (All fear is bondage)
  • இறைவனுக்கு அஞ்சதலே அறிவின் தொடக்கம். (The fear of the lord is the beginning of knowledge)
  • கீழே இருப்போன் வீழ்ந்துவிடுவோம் என பயப்பட வேண்டாம். (He that is down needs no fear to fall)
  • சாவுக்கு அஞ்சுபவன் வாழான். (He that fears death lives not)
  • செல்வம் கவலையும் அச்சமும் கொண்டுவரும். (Riches bring care and fear)
  • மனச்சான்று தன் தவற்றுக்குச் செலுத்தும் வரியே அச்சம். (Fear is the tax that conscience pays to guilt)
  • முன் உணர்வான அச்சமே பாதுகாப்பின் தாய். (Early and provident fear is the mother of safety)

அடித்தல்(வீசுதல்) (BLOW)

  • (i) தற்பெறுமை பேசாதே (ii) தன்னைப் புகழ்தல் தகாது, (Never blow your own trumpet)
  • ஒரே சமயத்தில் முன்னுக்குப்பின் முரணாய்ப் பேசாதே. (Never blow hot and cold in the same breath)
  • நச்சுக்காற்று நன்மை தராது. (It is an ill wind that blows nobody good)

அதிகாரம் (AUTHORITY)

  • (i) தன்னை ஆளத் தெரியாதவன் பிறரை ஆள முடியாது (ii) தன்னடக்கமில்லாதவன் பிறரை அடக்க முடியாது. (He is not fit to command others that cannot command himself)
  • அடங்கத் தெரியாதவனுக்கு ஆளத் தெரியாது. (No man can be a good ruler unless he has first been ruled)
  • அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும். (Authority shows the man)
  • ஆளைப் புரிந்து கொள்ள அதிகாரம் அளித்துப் பார். (If you wish to know a man give him authority)
  • கும்பலால் ஆளப்படுவதைவிட கும்பலை ஆள்வது மேல். (Better to rule than to be ruled by the mob)
  • தேளுக்கு மணியம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டும். (Give authority to the wicked and reap trouble)
  • பட்டறைக் கல்லாய் இருப்பதைவிட சம்மட்டியாய் இருப்பது மேல். (It is better to be the hammer than the anvil)

அதிர்ஷ்டம் (FORTUNE)

  • (i) உன் அதிர்ஷ்டம் உனக்கு தெரியாது (ii) தன் அதிர்ஷ்டம் தனக்குத் தெரியாது. (You never know your luck)
  • அதிர்ஷ்டக்காரனுக்கு ஆலோசனை தேவை இல்லை. (Lucky man needs no counsel)
  • அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும். (Good luck reaches further than long arms)
  • அதிர்ஷ்டம் வரும்போது தவறவிடாதே. (When fortune smiles embrace her)
  • ஆபத்துக்கு உதவுபவனே உண்மையான நண்பன். (A friend in need is a friend indeed)
  • உழைப்பின் வாரா உறுதிகள் உளவேர் (Diligence is the mother of fortune)
  • ஒரு கிலோ ஞானத்தைவிட ஒரு கிராம் அதிர்ஷ்டம் மதிப்பானது. (An ounce of luck is worth a pound of wisdom)
  • குபேரன் குருடன். (Fortune is blind)
  • செல்வம் செல்வத்தோடு சேரும். (Fortune favours fortune)
  • துரதிருச்டம் பெரும்பாலும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். (Bad luck often brings good luck)
  • நிழலருமை வெயிலில் தெரியும். (Misfortune tells us what fortune is)
  • புத்திசாலியாய்ப் பிறப்பதைவிட அதிர்ஷ்டக்காரனாய்ப் பிறப்பது மேல். (Better be born lucky than wise)
  • முட்டாள் அதிர்ஷ்டம் முட்டும். (Fortune favours fools)
  • யானைக்கு ஒரு காலம் பூனைக்கும் ஒரு காலம் வரும். (Every dog has his day)
  • வீரனை அதிர்ஷ்டம் விரும்பிச் சேர்ந்திடும். (Fortune favours the brave)

அமைதி (CALM)

  • (i) மன்னன் தவறே செய்திட மாட்டான் (ii) அரசனுக்கு செய்வது எல்லாம் சரியே. (The king can do no wrong)
  • புயலுக்குப்பின் அமைதி. (After a storm there is a calm)
  • மன்னர்களுக்கு அடிமைகள் அவசியம் தேவை. (Kings must have slaves)
  • மன்னனுக்கு என்றும் மரணம் இல்லை. (The king never dies)
  • மன்னன் என்றும் மன்னனே. (A king is always a king)

அரசாங்கம் (GOVERNMENT)

  • அரசுக்கு ஆட்டுக்காரனும் வேண்டும் கசாப்புக்காரனும் வேண்டும். (Governments need to have both shepherds and butchers)
  • குறைந்த அளவு ஆளும் அரசே மிகச் சிறந்த அரசு. (The best government is that which governs least)
  • நாட்டின் தகுதிக்கு ஏற்ற அரசே அமையும். (Every country has the government it deserves)
  • மேல் இருந்து ஒழுகும் ஒரே பாத்திரம் அரசுதான். (The government is the only known vessel which leaks from the top)

அவசரம் (பதற்றம்) (HASTE)

  • (i) அவசரக் கோலம் அள்ளித் தௌ¤த்தல் (ii) அரைகுறை வேலையின் அன்னை அவசரம். (Haste is the mother of imperfection)
  • (i) அவசரத்தில் உள்ளது தவறு (ii) அவசரப்பட்டால் தவறு நிச்சயம். (In haste is error)
  • (i) பதறிய காரியம் சிதறிப் போகும் (ii) பதறாத காரியம் சிதறாது. (Haste makes waste)
  • (i) வேகம் விவேகம் அல்ல (ii) அவசரப்பட்டு அடியெடுத்து வைப்பது ஆகாது. (It is the pace that kills)
  • அவசரக் கல்யாணம் நிரந்தர மனவருத்தம். (Marry in haste and repent at leisure)
  • அவசரக்காரனுக்கு புத்தி மட்டு. (Haste is a fools choice)
  • அவசரம் அடிசறுக்கி விழும். (Haste trips up its own heels)
  • அடிப்பதைத் தவிர எதிலும் அவசரம் கூடாது. (Nothing should be done in haste but gripping a flea)
  • மெதுவாக அவசரப்படு. (Make haste slowly)

அவதுறு (DEFAME)

  • அதிகச் சேறு எறிந்தால் தான் ஒன்றிரண்டு ஒட்டாதிரா. (Throw dirt enough and some will stick)
  • அவததூறு பேசுபவன் ஆயிரம் முறை கொல்வான் கொலைகாரன் ஒருமுறைதான் கொல்வான். (The slanderer kills a thousand times the assassin but once)
  • அவப்பெயர் சூட்டு தூக்கில் மாட்டு. (Give a dog a bad name and hang him)
  • பிறர் மீது சேறு பூசுபவன் தன் மீது அதிகம் பூசிக்கொள்வான். (He that flings dirt at another dirtieth himself most)

அழகு (BEAUTY)

  • (i) கல் நெஞ்சங்களையும் கரைத்திடும் அழகு (ii) பூட்டிய கதவுகளையும் திறந்திடும் அழகு. (Beauty opens locked doors)
  • (i) ராசா மெச்சியவள் ரம்பை (ii) காண்பவர் கண்ணே அழகின் அடித்தளம். (Beauty is in the eye of the beholder)
  • (i) வெறும் அழகு சோறு போடுமர் (ii) அழகிருந்தால் உலை கொதிக்குமர் (Beauty will buy no beef)
  • அரிதாரம் பூசினால் அழகு வந்துவிடாது. (Beauty comes not by forcing)
  • அழகிய பொருள் என்றும் ஆனந்தம் அளித்துவிடும். (A thing of beauty is a joy for ever)
  • அழகிய முகத்திற்குப் பரிந்துரை தேவையில்லை. (A good face is a letter of recommendation)
  • அழகிய முகமும் அழுகல் பேரமாகும். (A fair face may be a foul bargain)
  • அழகிய முகம் ஆனால் அழுகிய உள்ளம். (A fair face but a foul heart)
  • அழகின் ஆழம் தோலளவுதான். (Beauty is but skin deep)
  • அழகு உண்மை உண்மையே அழகு. (Beauty is truth truth beauty)
  • அழகு ஒரு மலரே (Beauty is but a blossom)
  • அழகு ஒருமுறை களங்கப்பட்டாள் எப்போதும் துலங்காது. (Beauty blemished once is forever lost)
  • அழகு தப்பிக்க அருமையாய் உதவிடும். (Beauty for some provides escape)
  • அழகு வயதைக் குறைத்துக் காட்டும் (Beauty doth varnish age)
  • அழகும் நேர்மையும் அரிதே இசைவுறும். (Beauty and honesty seldom agree)
  • அழகே ஒரு சக்தி புன்சிரிப்பே அதன் கூர்வாள். (Beauty is power a smile is its sword)
  • இதயத்தூய்மையே உண்மை அழகு. (True beauty consists in purity of heart)
  • எருது இறைப்பதை விட அழகு அதிகம் இறைத்துவிடும். (Beauty draws more than the oxen)
  • எல்லைப்புறக் கோட்டையும் அழகிய மனைவியும் சண்டையை உண்டாக்கும். (A fair wife and a frontier castle breed quarrel)
  • கருணை இல்லா அழகு பயனற்றது. (Beauty without bounty avails not)
  • பணிவில்லாத அழகு பாராட்டுப் பெறாது. (Beauty without modesty is infamous)
  • பண்பற்ற அழகு ஒரு சாபக்கேடு. (Beauty without virtue is a curse)
  • மௌனமாயிருந்தாலும் அழகு பேசிவிடும். (Beauty is eloquent even when silent)

அழுகை (CRY)

  • (i) பரமசிவன் தலையில் இருந்தால் பாம்பும் கருடா சௌக்கியமர் என்று கேட்கும் (ii) பாதுகாப்பான இடத்தை அடையும் மட்டும் பகைவனையும் நட்பாக்கு. (Call the bear uncle till you are safe across the bridge)
  • (i) பலர் அழைக்கப்படுகிறார்கள் சிலரே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (ii) பலருக்கு அழைப்பு சிலருக்கே தேர்வு. (Many are called but few are chosen)
  • அழைப்பு (CALL)
  • இறக்கும் வரையில் ஒருவரையும் மகிழ்ச்சியானவன் என்றழைக்காதே. (Call no man happy till he dies)
  • ஒரு கண்ணால் அழு மறு கண்ணால் சிரி. (To cry with one eye and laugh with the other)
  • கரை சேரு மட்டும் கத்திக் கொண்டிரு. (Cry all the way to the bank)
  • சிந்திய பாலுக்கு ஒப்பாரி வைக்காதே. (Do not cry over spilt milk)

அளவு (MEASURE)

  • அளவறிந்த நடவடிக்கை சிறப்பாக வெற்றிபெறும். (Moderate measure succeeds best)
  • அளவறிந்து வாழ்வதே வாழ்க்கை. (Measure is treasure)

அறிமுகங்கள் (ACQUAINTANCE)

  • அறிமுகம் உடையோர் பலராயினும் உற்ற நண்பர்கள் ஒரு சிலரே வேண்டும். (Have but a few friends though many acquaintances)
  • குறுகிய அறிமுகம் வருந்தவைக்கும். (Short acquaintance brings repentance)
  • சரிக்குச் சரி பழிக்குப் பழி (Measure for measure)
  • புதிய அறிமுகங்கள் புகாத வாழ்க்கை விரைவில் தனிமைப்படும். (If a man does not make new acquaintances through life he will soon find himself alone)
  • மனிதனே அனைத்துக்கும் அளவுகோல் ஆவான். (Man is the measure of all things)

அறியாமை (IGNORANCE)

  • அறியாமையே ஆனந்தம். (Ignorance is bliss)
  • அறியாமையே கலைக்கு எதிரி. (Art has no enemy but ignorance)
  • அறியாமையே வாழ்க்கையின் அமைதி. (Ignorance is the peace of life)
  • அறியாமையைப்போல் ஒரு குருட்டுத்தனம் இல்லை. (There is no blindness like ignorance)
  • அறியும் ஆவலில் அக்குவேறு ஆணிவேறு ஆனது. (Curiosity kills the cat)
  • அறியும் ஆவல் (தலையிடுதல்) (INQUISITIVENESS)
  • கேள்வி எதையும் கேட்காதே! பொய்களை பதிலாய் பெறாதே! (Ask no questions and hear no lies)
  • சிறிதளவு குறுக்கீடு பேரளவு நிம்மதி. (Little meddling makes much rest)
  • சூரியனை முறைத்துப் பார்பவன் கடைசியில் குருடனாவான். (He that gazes upon the sun shall at last be blind)
  • தெரியாமல் எட்டிப்பார்பவன் குமட்டுவதைக் காண்பான். (He who peeps through the hole may see what will vex him)
  • நீ அறியாதது உன்னைச் சேதப்படுத்தாது. (What you do not know can not hurt you)
  • மற்றவன் பானையில் என்ன கொதிக்கிறது என்று விசாரிக்காதே. ( Enquire not what boils in another pot)
  • மனதின் இருளே அறியாமை. (Ignorance is the night of the mind)
  • வெட்கமின்மேயே அறியாமையின் தாய். (Ignorance is the mother of impudence)

அறிவு (KNOWLEDGE)

  • அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும். (A little learning is a dangerous thing)
  • அறிவில்லாத ஆர்வம் சுடரில்லாத நெருப்பு. (Zeal without knowledge is fire without light)
  • அறிவு அனைத்து நற்பண்புகளின் தாய் அறியாமையிலிருந்து அனைத்து தீயபண்புகளும் வெளிப்படுகின்றன. (Knowledge is the mother of all virtues. All vice proceeds from ignorance)
  • அறிவு ஏழைகளிடையே வெண்பொன் பிரபுக்களிடையே செம்பொன் மன்னரிடையே அணிகலன். (Knowledge is silver among the poor gold among the nobles and jewel among princes)
  • அறிவு ஒரு சுமை அன்று. (Knowledge is no burden)
  • அறிவு தன் விலை அறியும். (Knowledge finds its price)
  • அறிவு மட்டுமே அழியா அணிகலம். (The only jewel which will not decay is knowledge)
  • அறிவு வருகிறது ஆனால் ஞானம் நீடித்து நிற்கிறது. (Knowledge comes but wisdom lingers)
  • அறிவே ஆற்றல். (Knowledge is power)
  • அறிவே நன் மனிதனைத் தொடங்கி வைக்கிறது ஆனால் அதுவே அவனை முழுமை அடைவிக்கிறது. (Knowledge begins a gentleman but it is knowledge that completes him)
  • அறிவைப் பெருக்குபவன் துயரத்தைப் பெருக்குவான். (He who increases knowledge increases sorrow)
  • அனுபவமில்லாத அறிவு அரைக் கலைஞனையே உருவாக்கும். (Knowledge without practice makes but half an artist)
  • ஐயமே அறிவின் திறவுகோல். (Doubt is the key of knowledge)
  • ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே விஞ்ஞானம். (Science is organized knowledge)
  • கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும். (Art and knowledge bring bread and honor)
  • நம் அறிவில் பாதியை நாம் அல்லல்பட்டு பெற வேண்டும் சுலபமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. (Half our knowledge we must snatch not take)
  • நம்மை அறிவதே நமக்கறிவாகும். (All our knowledge is ourselves to know)
  • மறைந்துள்ள அறிவுக்கும் அறியாமைக்கும் வேற்றுமை இல்லை. (Hidden knowledge differs little from ignorance)

அறிவுரை (ADVICE)

  • (i) செய்கை வரும் முன்னே அறிவுரை வரும் பின்னே (ii) செய்து முடித்தபின் சேர்ந்திடும் அறிவுரை. (When a thing is done advice comes too late)
  • அளவுக்கு மீறி அறிவுரை கேட்டால் அதிகக் குழப்பம் அடைந்திட வேண்டும். (Too much consulting confounds)
  • அறிவுரை கொடுப்பதினும் கேட்பதே நல்லது. (It is safer to hear and take counsel than to give it)
  • அறிவுரை தேவைப்படும் பொழுதுதான் அலட்சியம் கண்ணை மறைக்கும். (Advice when most needed is least heeded)
  • அறிவுரை நல்லதானால் யாரானாலும் கொள். (Accept if the counsel be good no matter who gave it)
  • அறிவுரை போல இலவசம் வேறெது? (Nothing is given so free as advice)
  • உப்பும் அறிவுரையும் கேளாமல் தராதே. (Give neither advice nor salt till you are asked for it)
  • உன்னை நேசிப்பவனின் அறிவுரையை தற்போது கொள்ளாவிடினும் பிற்போது கொள்ள அதை எழுதி வைத்திடு. (write down the advice of him who loves you though you like it not at present)
  • கும்பலில் அறிவுரை ஒருபோதும் கூறாதே (Never give advice in a crowd)
  • நல்ல அறிவுரை கொடுப்பது எளிது அதன்படி நடப்பது அரிது. (It is hard to follow good advice than to give it)
  • நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது. (Good counsel has no price)
  • நல்ல அறிவுரைக்கு நாடிடு கிழவனை. (If you wish good advice consult an old man)
  • போருக்குப் போவென்றும் திருமணம் புரியென்றும் யாருக்கும் அறிவுரை கூறாதே (Never advise anyone to go to war or marry)
  • முற்றிய பிறகு பெற்ற அறிவுரை தந்திடும் வேதனை. (Counsel is irksome when the matter is past remedy)
  • விவேகம் எச்சரிக்கும் அவிவேகம் செயல்படும் (While the discreet advise the fool does his business)

அனுபவம் (EXPERIENCE)

  • அனுபவமே அருமையான ஆசான். (Experience is the best teacher)
  • அனுபவமே அறிவின் தாய். (Experience is the mother of wisdom)
  • அனுபவம் பிழைகளைச் செய்தபின் மெதுவாகக் கற்பிக்கிறது. (Experience teaches slowly and at the cost of mistakes)
  • கல்வியில்லாத அனுபவம் அனுபவம் இல்லாத கல்வியைவிட மேல். (Experience without learning is better than learning without experience)
  • காயம் ஆறினாலும் தழும்பு நிற்கும். (Though the wound be healed yet a scar remains)
  • செய்வதில் நாம் கற்கிறோம். (In doing we learn)
  • மற்றவர்கள் தவறுகண்டு தான் கற்பதே நல்லது. (It is good to learn at other men cost)

அன்பு (KINDNESS)

  • அன்பு இதயங்கள் அதிவிரைவில் அநீதிக்கு ஆட்படும். (Kind hearts are soonest wronged)
  • அன்பு ஒருபோதும் வீணாக்கப்படுவதில்லை. (Kindness is never wasted)
  • அன்பே வெற்றிகொள்ள உன்னத ஆயுதம். (Kindness is the noblest weapon to conquer with)
  • இச்சையால் வருவதே அன்பு. (Kindness comes of will)
  • விதை விதைத்தால் பயிர் விளையும் அன்பு விதைத்தால் அன்பு வளரும். (Kindness like grain increase by sowing)

ஆசை (AMBITION)

  • (i) விரைவாகப் படியேறுபவர் திடீரென வீழ்வர் (ii) அவசர முன்னேற்றம் அடித்திடும் பல்டி. (Hasty climbers have sudden falls)
  • (i) உச்சியில் என்றும் ஓர் இடம் உண்டு (ii) ஆர்வ முயற்சியால் அடையலாம் உச்சியை. (There is always room at the top)
  • (i) முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் (ii) தேடுவார் காண்பர் தேடாதார் காணார். (Seek and ye shall find)
  • அடிவாரத்தில் தங்கிவிடுபவன் மலையைக் கடக்கமாட்டான் தேங்குபவன் முன்னேறான். (He that stays in the valley shall not get over the hill)
  • ஆசைக்கு அளவில்லை. (Desire has no rest(limit))
  • ஆசைப்படுபவர் விடாது முயல்வர். (Ambition makes people diligent)
  • ஏற்றம் உயர உயர இறக்கம் அதிகம் அதிகம். (The higher the mountain the greater the descent)
  • பெரிய கடலில்தான் பெருமீன் இருக்கும் அதில் மூச்சடக்கத் தெரியாமல் முத்தெடுக்க முயலாதே. (In a great river great fishes are found but take heed lest you be drowned)
  • பேராசை இழந்திடும் பெரும்பாலோரை. (Ambition loses many a man)
  • பேராசை பெருநட்டம். (The greater the ambition the greater the low)
  • பேராசைக்கு இல்லை இரக்க குணம். (Ambition should be made of sterner stuff)

ஆதாயம் (GAIN)

  • (i) நாய் விற்ற காசு குரைக்காது (ii) ஊன் விற்ற காசு நாறாது. (Gain savors sweetly from anything)
  • ஆதாமின் வீழ்ச்சியால் நாம் பாவிகள் ஆனோம். (In Adam’s fall we sinned all)
  • ஆதாம் ஆப்பிளைக் கடித்ததால் நம் பல்வலி இன்னும் தீர்ந்தபாடில்லை! (Adam ate apple and our teeth still aches)
  • ஆதாம் உறங்கினான் விலாவில் ஏவாள் ஊதினாள் விந்தை அவன் முதல் உறக்கமே இறுதி ஓய்வானது. (Whilst Adam slept Eve from side arose strange. His first sleep would be his last repose)
  • ஆதாயம் வருமானால் பட்டதெல்லாம் மறந்துவிடும். (Pain is forgotten when gain follows)
  • ஆதிமனிதன்(ஆதாம்) (ADAM)
  • ஏதேனும் ஆதாயம் இல்லாமல் பெறு நட்டம் இல்லை. (There is no great loss without some gain)
  • ஒருவனது நட்டம் மற்றவனது இலாபம். (One mans loss is another mans gain)
  • பெருத்த லாபம் உழைப்பை எளிதாக்கும். (Great gain makes work easy)
  • மதிப்பும் ஆதாயமும் ஒரே கோணியில் இராது. ( Honour and profit lie not in one sack)

ஆபத்து (DANGER)

  • ஆபத்த நீங்கிவிட்டால் ஆண்டவனை நினைக்க மாட்டோம். (The danger past and god forgotten)
  • ஆபத்தில்லாமல் கலம் செலுத்த ஆழ் கடலுக்குச் செல்லாதே. (He that would sail without danger must never come on the main sea)
  • ஆபத்து நீங்கிவிட்டால் பாதி தவிர்த்தது போல். (A danger foreseen is half avoided)
  • ஆபத்து பாதுகாப்பின்அடுத்த வீட்டுக்காரன். (Danger is next neighbor to security)
  • ஆபத்து மனிதனை பக்திமானாக்கும். (Danger makes men devout)
  • ஆபத்தை ஆபத்தால் வெல்ல முடியாது. (Danger is never overcome with danger)
  • ஒவ்வொரு கல்லுக்கடியிலும் ஒவ்வொரு தேளிருக்கும். (There is a scorpion under every stone)
  • ஓடும் குதிரைக்குத் திறந்த கல்லறை. (A running horse has an open grave)
  • கௌரவப் பதவியில் ஆபத்து அதிகம். (The post of honour is the post of danger)
  • நீந்தக் கற்காமல் நீர் அருகே செல்லாதே. (Do not go near water until you learn how to swim)
  • நெருப்போடு விளையாடினால் தீப்புண் ஏற்படும். (If you play with fire you get burnt)

ஆப்பிள் (APPLE)

  • அழுகின பழங்களில் அதிகம் பொறுக்க முடியாது (There is small choice in rotten apples)
  • ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் தின்றால் ஓட வேண்டாம் வைத்தியரிடம். (An apple a day keeps the doctor away)
  • முயற்கொம்பு மான்கொம்பு. (The silver apples of the moon the golden apples of the sun)

ஆர்வம் (ASPIRATION)

  • ஆர்வம் உடையோரே ஆர்வத்தைத் தூண்ட முடியும். (Aspiring people are inspiring people)
  • நாம் எதற்கு ஆர்வம் கொள்வோமோ அதாகவே ஆவோம். (The thing we long for that we are)
  • நாலுபேர் உதவியின்றி நாட்டையாள முடியுமர் (No bird soars too high if it soars with its own wings)

இரத்தம்(குருதி) (BLOOD)

  • தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். (Blood is thicker than water)
  • தியாகிகளின் குருதியே மாதாகோயிலின் வித்து. (The blood of martyrs is the seed of the church)
  • நிறைந்த இரும்புச்சத்துள்ளதே சிறந்த ரத்தம். (That is best blood that hath most iron in it)
  • மேற்குடி மக்களால் நற்பயனும் உண்டு தீப்பயனும் உண்டு. (Blue blood has its uses and abuses)

இரவலன்(பிச்சைக்காரன்) (BEGGAR)

  • ஆசைகளே குதிரைகளானால் பிச்சைகாரர் சவாரி செய்வர். (If wishes were horses beggars would ride them)
  • பிச்சைகாரனாய் வாழ்வதைவிட பிச்சைக்காரனாய் இறப்பது மேல். (Better die a beggar than live a beggar)
  • பிச்சைகாரன் ஒருபோதும் திவாலாகான். (A beggar can never be bankrupt)
  • பிச்சைக்காரர்கள் தேர்ந்தெடுப்பவர்கள் ஆக முடியாது. (Beggars cannot be choosers)

இருத்தல் (BE)

  • அமைதியாய் இரு விரும்பியதை அடைவாய். (Be still and have thy will)
  • இயல்பாய் இரு. (Be as you would seem to be)
  • இருந்தால் இயல்பாய் இரு இல்லாவிட்டால் சும்மா இரு. (Let them be as they are or not be at all)
  • இருப்பதா இறப்பதா இதுவே பிரச்சனை. (To be or not to be that is the question)
  • உனக்கு நீ நண்பனாய் இருந்தால் மற்றவர் உன்னை நண்பனாக்கிக் கொள்வர். (Be a friend to thy self and others will be friend you)

இறைவன் (LORD)

  • இறை அச்சமே அறிவின் தொடக்கம். (The fear of the lord is the beginning of wisdom)
  • இறைவனே எனது ஒளியும் முக்தியும். (The lord is my light and my salvation)
  • கடவுளால் விரும்பப்படுவோர் தண்டித்துத் திருத்தப்படுவர். (Whom the lord love the chasteneth)
  • சாதாரண மக்களையே ஆண்டவன் அதிகம் விரும்புகிறார் அதனாலேயே சாதாரண மக்களை அதிகம் படைக்கிறார். (The lord prefers common looking people. That is why he makes so many of them)

இன்பம் (மகிழ்ச்சி) (JOY)

  • அழகிய பொருள் என்றும் ஆனந்தம் தரும். (A thing of beauty is a joy for ever)
  • இதயத்தின் மகிழ்ச்சி முகத்தை மகிழ்விக்கும். (The joy of the heart makes the face merry)
  • மகிழ்ச்சி மகிழ்ச்சியை மகிழ்விக்கும். (Joy delights joy)
  • மகிழ்ச்சியே மாமருந்து. (Joy is a great medicine)
  • மகிழ்ச்சியைச் சிறையிலடைக்காதே! (Let joy be unconfined)

உடல் (BODY)

  • உடலின் தேவைகள் அனந்தம் ஆன்மாவின் தேவையோ சிலேவ, (The soul needs few things the body many)
  • திடமான உடலில்தான் திடமான மனம். (A sound mind in a sound body)
  • பேசிடின் இவ்வுடல் பிணிகளின் பெட்டகம். (For the body at best is a bundle of aches)
  • மனித உடலினும் புனிதம் வேறில்லை. (If anything is sacred human body is sacred)

உடல்நலம் (HEALTH)

  • (i) உடல்நலமே மகிழ்ச்சி (ii) ஆரோக்கியமே ஆனந்தம். (Health is happiness)
  • (i) நலவாழ்வே நற்செல்வம் (ii) உடல்நலம் உயர் செல்வம் (இ) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். (Health is wealth)
  • (i) நோய்வரும் வரை நலத்தில் அக்கறை செலுத்துவதில்லை (ii) நோய் வராதவரை உடல் நலத்திற்கு மதிப்பில்லை. (Health is not valued till sickness comes)
  • ஆரோக்கியம் இல்லா வாழ்க்கை பாழ். (Without health life is not life life is useless)
  • உடல்நலத்துடன் இருக்கையிலேயே நோய் பற்றிப் படி. (Study sickness while you are well)
  • உடல்நலமும் உற்சாகமும் ஒன்றை ஒன்று பெற்றுத்தரும். (Health and cheerfulness mutually beget each other)
  • உடல்நலமும் புரிந்துகொள்தலும் வாழ்கையின் இரு பெரும் பேறுகள். (Health and understanding are two great blessings of life)
  • நேரத்தே எழுந்து காலத்தே உண்டு நேரத்தே உறங்கினால் நூறாண்டு வாழலாம். (To rise at five dine at nine sup at five go to bed a nine makes a man live to ninety nine)
  • நொறுங்கத் தின்பவன் நூறாண்டு வாழ்வான். (He who masticates well lives up to a hundred full)
  • வலிமை வாய்ந்த தலை ஒருபோதும் வலிக்காது. (It is a hardened head that never ached)

உடை (DRESS)

  • அழகிய உடை உடுத்தால் அழகனாகலாம். (Fine feathers make fine birds)
  • தற்போதைய நவநாகரிகம் எப்போதும் அழகே. (The present fashion is always handsome)
  • நல்ல ஆடைகள் எல்லாக் கதவுகளையும் திறந்திடும். (Good clothes open all doors)
  • பாணியே எண்ணத்தின் உடை. (Style is the dress of thought)
  • மனதில் பதிய வேண்டும் என உடை உடுப்பவள் மனதில் பதியாமலே போய்விடுவாள். (One who dresses to impress seldom impresses)

உணவு (BREAD)

  • (i) பட்டினிப் பழைய சோறு மேல் (ii) உணவே இல்லாமைக்கு ஒரு கவளம் மேல். (Better half a loaf than no bread)
  • இன்றைய உணவை இன்று எமக்களியுங்கள். (Give us this day our daily bread)
  • உணவு மட்டுமே மனிதனை வாழ்விக்காது. (Man shall not live by bread alone)
  • துரதிருச்டமே உணவு இடரே குடிநீர். (The bread of adversity and the water of affliction)
  • நம்பிக்கையே ஏழையின் உணவு. (Hope is the poor mans bread)

உண்ணுதல் (EAT)

  • (i) உப்பதிகம் உண்டால் துயரதிகம் உண்டாம் (ii) உப்புத் தின்னவன் தண்ணீர் குடிப்பான். (Help you to salt help you to sorrow)
  • அளவறிந்து உண்டால் ஆரோக்கியமாய் வாழலாம். (Feed by measure and defy the physician)
  • அற்ப உண்டியே அதிகம் உண்பவன். (He that eats least eat more)
  • ஆங்கிலேயன் மனதில் இடம்பிடிக்க அறுசுவை உண்டி படை. (The way to an Englishman heart is through his stomach)
  • இனிய பண்டங்கள் பல்லுக்கு எதிரி. (Sweet things are bad for the teeth)
  • உண்டு பார்த்தால்தான் உணவின் சுவை தெரியும். (The proof of op the pudding is in the eating)
  • உண்ணுவதை வைத்து உடையவர் யார் என்று கூறிவிடலாம். (Tell me what you eat and I will tell you what you are)
  • ஒரு சாண் வயிறு இல்லாவிட்டால் உலகத்தில் போர் இல்லை. (An army marches on its stomach)
  • பசி அறியாது ருசி. (All things require skill but an appstite)
  • பசி ஆறினால் கோபம் மாறும். (When meat is in anger is out)
  • மதிய உணவின் பின் சற்று ஓய்வுகொள் இரவு உண்டபின் ஒரு கல் நட. (Rest a while after dinner walk a mile after supper)

உதவி (HELP)

  • உடன் உதவுதலே உதவி தாமதித்த உதவி உதவியன்று. (Slow help is no help)
  • தனக்கு உதவாதவன் தரணிக்கு உதவான். (He helpeth little that helpeth not himself)
  • தன் கையே தனக்குதவி. (Self help is the best help)
  • பல கரங்கள் பணியை இலகுவாக்கும். (Many hands make light work)
  • வீழ்ந்து விட்டவன் தாழ்ந்தவனுக்கு உதவ முடியாது. (He that is fallen cannot help him that is down)

உதாரணம் (EXAMPLE)

  • (i) நல்ல உதாரணமே சிறந்த புத்திமதி (ii) உதாரணமாய் நடப்பதே சிறந்த போதனை. (A good example is the best sermon)
  • உபதேசம் வழிகாட்டலாம் ஆனால் முன்னுதாரணம் நடத்திச் செல்லும். (Precepts may lead but examples draw)
  • உனக்கு செய்யப்பட விரும்புவதைப் போலவே நீ பிறருக்குச் செய். (Do as you would be done by)
  • உனக்கு மற்றவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறாயோ அதை மற்றவருக்குச் செய். (Do unto others as you would they should do unto you)
  • சட்டத்தைச் செய்வோன் அதனை மீறக் கூடாது. (Law makers should not be law breakers)
  • சொன்னபடி செய் நான் செய்தபடி செய்யாதே. (Do as I say not as I do)
  • முன்னுதாரணமே உபதேசத்தைவிட மேலானது. (Example is better than precept)

உரையாடல் (CONVERSATION)

  • (i) உரையாடல் கலையின் மௌனத்திற்கும் பங்குண்டு (ii) பேசாதிருப்பதும் ஒரு கலையே. (Silence is one great art of conversation)
  • உரையாடலின் முதற்கூறு உண்மை அடுத்தது நகைச்சுவை. (This first ingredient in conversation is truth the next wit)
  • உரையாடல் ஒருவரைக் காட்டிக் கொடுத்துவிடும். (Conversation reveals one what he is)
  • உரையாடல் ஒருவனை ஆயத்த மனிதனாக்கும். (Conversation maketh a ready man)
  • குறைவாகப் பேசு அதிகம் சிந்தி. (Talk less think more)
  • பேச்சு பித்தளை மௌனம் தங்கம். (Speech is silver silence golden)
  • மற்றவர் சொன்னதை நினைவுகூர்வது உரையாடல் அல்ல மற்றவர் நினைவு கூர விரும்புவதை உரைப்பதே உரையாடல். (A good conversationalist is not one who remembers what was said but says what wants to remember)

உழைப்பு (LABOUR)

  • உண்மை வெற்றி உழைப்பிற்கே. (The true success is to labour)
  • உழைக்கக் கற்போம் காத்திருக்கவும் கற்போம். (Let us learn to labour and to wait)
  • உழைப்பே அனைத்தையும் வெல்லும். (Labour conquers everything)
  • உழைப்பே வழிபாடு (ஆராதனை). (Labour is worship)
  • உழைப்பைத் துருப்பிடிக்க வைக்காதே. (Spare not your labour)

ஊழல் (CORRUPTION)

  • (i) சொறிபிடித்த ஒரு ஆட்டால் மந்தையே கெடும் (ii) ஒரு கூடைப் பழத்திற்கு ஒரு அழுகல் போதும். (One scabbed goat will mar a whole flock)
  • (i) நேர்மை இல்லாத கையாள் நேர்மையுள்ள அதிகாரியையும் கெடுத்துவிடுவான் (ii) சிறு கையூட்டும் பெருஞ்செல்வத்தைக் குலைத்துவிடும். (The unrighteous penny corrupts the righteous pound)
  • அதிகாரம் ஊழல் செய்ய மயக்கும் முழு அதிகாரம் ஊழல் புரிய முழுமையாக மயக்கும். (Power tends to corrupt and absolute power corrputs absolutely)
  • இலஞ்சம் கொடாதே உரிமையை விடாதே. (Neither bribe nor lose thy right)
  • கதவைத் தட்டாமலே கையூட்டு வந்து சேரும். (A bribe will enter without knocking)
  • கையூட்டு அளிப்பவன் காரியம் கைகூடும். (Who greases his way travels easily)
  • சாக்கடையில் மூழ்குபவனிடம் சந்தன மணம் வீசுமர் (He that has to do with what is foul never comes away clean)
  • சிறிய திருடனுக்குத் தூக்குமரம் பெரிய திருடனுக்கு சிம்மாசனம். (Little thieves are hanged but great ones escape)
  • பொன்னே துருப்பிடித்தால் போக்கிடம் ஏது? (Corruption of the best becomes the worst)
  • மாடு எருமை மாட்டோடு சேர்ந்தால் சேற்றுக் குட்டையில்தான் அமிழும், (He who lives with cats will get a taste for mice)

எச்சரிக்கை (CAUTION)

  • (i) நீந்தத் தெரியாவிட்டால்ஆழம் போகாதே (ii) சிறிய படகுகள் கரை காணாமல் போகக் கூடாது (Little boats should keep near shore)
  • ஆழம் பார்த்துக் காலை விடு, (Look before you leap)
  • பகலில் அக்கம் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுவும் பேசாதே. (Walls have ears)
  • மழைக்கு முன் குடையைச் சீர்செய் (In fair weather prepare for foul)
  • முன் எச்சரிக்கை உள்ளவன் தவறுசெய்வது அரிது. (The cautious seldom err)
  • வருமுன்னர் காக்காவிட்டால் வாழ்க்கை பாழாம். (Prevention is better than cure)

எதிர்காலம் (FUTURE)

  • எதிர்காலம் தற்காலத்தால்தான் வாங்கப்படுகிறது. (The future is purchased by the present)
  • எல்லாம் போனவர்க்கும் எதிர்காலம் உண்டு. (When all is lost future still remains)
  • நொடியை நன்கு கவனித்தால் மணி தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும். (Take care of minutes for hours will take care of them)

எதிர்பார்ப்பு (ANTICIPATION)

  • (i) எதையும் தாங்கும் இதயமே சிறந்தது (ii) இறுதியில் சிரிப்பவனே இடையறாது சிரிப்பான். (He laughs best who laughs last)
  • (i) முட்டை பொறியும் முன் குஞ்சுகளை எண்ணாதே (ii) மனக்கோட்டை கட்டாதே. (Do not count your chickens before they are hatched)
  • எதிர்பாராததைத் தவிர எதுவும் சதமல்ல. (Nothing is certain but the unforeseen)
  • கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே. (Do not bargain for fish which which is still in the water)
  • சாவினும் சாவச்சம் கொடியது. (Fear of death is worse than death itself)
  • மோசமானதை எதிர்பார் சிறந்ததனைக் கைப்பற்று. (Expect the worst take the best)
  • வெற்றி பெறுமுன் எக்காளமிடாதே. (Do not triumph before victory)
  • வைத்திருப்பதைவிட வாய்ப்புக்கு மதிப்பு அதிகம். (Prospect is often better than possession)

எருது (BULL)

  • காளை மிரளக் காட்டும் செந்துணி. (A red rag to the bull)
  • கொம்பைப் பிடித்து எருதை அடக்குதல். (To take the bull by the horn)
  • வெங்கலக் கடைக்குள் யானை புகுந்தது போல. (Like a bull in a china shop)

எல்லாம் (ALL)

  • (i) உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணுக்கு நோப்பாளம் (ii) உண்மை எல்லாம் விள்ள வேண்டாம். (All truths are not to be told)
  • அனைவரும் பேசினால் கேட்பது யார்? (When all men speak no man hears)
  • ஓயா வேலை தீராச் சோர்வு. (All work and no play makes jack a dull boy)
  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. (All his geese are swans)
  • நன்மையாக முடிபவை யாவும் நன்றே. (All is well that ends well)
  • பொதுச் சொத்து யாரையும் சேராது. (The property of all is a property of none)
  • போருக்கும் காதலுக்கும் செய்வது எல்லாமே நியாயம் தான். (All is fair in love and war)
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல. (All that glitters is not gold)

ஏறுதல் (CLIMB)

  • செங்குத்தான மலை ஏறுபவன் தொடக்கத்தில் மெல்லடிதான் வைக்க வேண்டும். (To climb steep hills require slow pace at first)
  • முடியை எட்ட அடியில் தொடங்கு. (He who would climb the ladder must begin at the bottom)
  • மேலே ஏறாதவன் கீழே எப்படி விழுவான். (He who never climbed never fell)

ஒழுங்கு (DISCIPLINE)

  • (i) வாலிபத்தை நன்கு ஆண்டால் வயோதிகம் தானே ஆளும் (ii) வாலிபத்தைக் கட்டுப்படுத்தினால் வயோதிகம் தானே கட்டுப்படும். (Rule youth well and age will rule itself)
  • எசமான் தூங்கு மூஞ்சியானால் வேலைக்காரன் மட்டி. (A sleepy master makes his servant a lout)
  • சிறு தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிடடால் பெறுந்தவறுகளைத் தவிர்க்க முடியாது. (He that corrects not small faults will not control great ones)
  • தன்னைக் கண்டித்துத் கொள்பவன் மகிழ்ச்சியில் திளைப்பான். (Happy is he that chastens himself)
  • பரிசுகளும் தண்டனைகளும் பாதுகாப்பு அரண்கள். (Rewards and punishments are the walls of a city)
  • முரட்டுக் குதிரைக்கு வலுத்த கடிவாளம். (A boisterous horse must have a rough bridle)

கடவுள் (GOD)

  • (i) கடவுள் விரும்பியபடியே அனைவரும் இருப்பர்  (ii) கடவுள் விருப்பப்படியே இங்கு மானிட வாழ்வு. (All must be as God wills)
  • இயன்றதைச் செய்தால் கடவுளட மிகச் சிறந்ததைச் செய்வார். (Do the likeliest and God will do the best)
  • கடவுளுக்கு தொண்டு புரிபவனே சிறந்த எசமானனுக்குத் தொண்டு புரிகிறான். (He who serves God serves a good master)
  • கடவுளை நம்பினோர் கைவிடப்படார். (God provides for him that trusts)
  • கடவுள் படைக்கிறார் மனிதன் வடிவமைக்கிறான். (God makes and man shapes)
  • கடவுள் பெயரைச் சொல்லித் தொடங்கிய காரியம் கெட்டுப் போகாது. (That never ends ill which begins in Gods name)
  • தமக்குத்தாமே உதவுபவருக்குக் கடவுள் உதவுகிறார். (God helps them that help themselves)
  • தூரத்தில் இருக்கிறார் என்று நாம் நினைக்கும் பொழுது கடவுள் இறுதியில் வருகிறார். (God comes at last when we think He is farthest off)
  • மனிதன் நினைக்கிறான் கடவுள் முடிக்கிறார். (Man proposes God disposes)
  • மனிதன் முடிந்ததைச் செய்கிறான் கடவுள் விரும்பியதைச் செய்கிறார். (Man does what he can ang God what he will)
  • மனிதன் விரும்புகிறான் கடவுள் முடிவு செய்கிறார். (Man desires God decides)

கடன் (DEBT)

  • (i) ஒருமுறை கடனாளி எப்போதும் கடனாளி (ii) ஒருமுறை கடன்பட்டால் எப்போதும் கடனாளி. (Once in debt always in debt)
  • (i) கடனை வாங்குதல் கவலையை வாங்குதலாம் (ii) கடன்பட்டால் எப்போதும் கடனாளி. (Borrowing is sorrowing)
  • இழக்கத் தயாராக இருப்பதையே கடனாகக் கொடு. (Lend only that which you can afford to lose)
  • ஒரே ஒரு கோட்டு வைத்திருப்பவன் அதைக் கடன் கொடுக்க முடியாது. (He who has but one coat cannot lend it)
  • கடன் ஒரு பெரிய சிலந்தி வலை (ஒட்டடை). (Debt is a great cobweb)
  • கடன் கொடுத்தல் (LEND)
  • கடன் கொடுத்தால் சண்டையை விலைக்கு வாங்குவாய். (Give a loan and buy a quarrel)
  • கடன் கொடுப்பது பகையை வளர்க்கும். (Lending nurses enmity)
  • கடன் கொடுப்பவன் கொடுப்பவனாகிறான். (He that lends gives)
  • கடன் பட்டவன் பொய் சொல்ல அஞ்சான். (Debtors are liars)
  • கடன் வாங்கவும் செய்யாதே கொடுக்கவும் செய்யாதே. (Neither a borrower nor a lender be)
  • பணத்தைக் கடன் கொடுத்தால் நண்பனை இழப்பாய். (Lend your money and lose your friend)
  • வறுமையில் கொடியது கடனே. (Debt is the worst poverty)

கடி (BITE)

  • (i) அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் (ii) பாம்பு கடித்தால் கயிற்றைக் கண்டாலும் பயம். (He that hath been bitten by a snake is afraid of rope)
  • (i) விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் (ii) மெல்ல முடியாத அளவுக்கு கடிக்காதே. (Do not bite more than you can chew)
  • அதிகமாகக் குரைப்பான் அரிதாகவே கடிப்பான். (His bark is worse than his bite)
  • ஒருமுறை கடித்தால் இருமுறை தயக்கம். (Once bitten twice shy)
  • செத்த பாம்பு கடிக்காது. (Dead men do not bite)

கட்டுதல் (BUILDING)

  • கடன் வாங்கிக் கட்டுபவன் விற்கவே கட்டுகிறான். (Who borrows to build builds to sell)
  • கட்டுவதும் கடன் வாங்குவதும் கோணி நிறைய வேதனை தரும். (Building and borrowing a sack full of sorrowing)
  • கட்டுவதை விட இடிப்பது எளிது. (It is easier to pull down than to build)
  • நன்றாய்க் கட்டுவதே நமது நோக்கம். (The end is to build well)

கணவன் (HUSBAND)

  • எல்லாக் கணவர்களும் ஒரே மாதிரிதான். ஆனால் முகங்கள் வெவ்வேறு இதனால் தான் அவர்களைப் பிரித்துக் கூற முடிகிறது. (All husbands are alike but they have different faces so you can tell them apart)
  • திட்டாத மனைவியுடன் வாழ்பவர் சொர்க்கத்தில் வாழ்பவர். (Husbands are in heaven whose wives scold not)
  • நல்ல கணவன் செவிடனாயிருக்க வேண்டும் நல்ல மனைவி குருடாய் இருக்க வேண்டும். (A good husband should be deaf and a good wife blind)
  • மணாளனைப் போலவே மனைவி. (As the husband is Wife is)

கண்கள் (EYES)

  • ஆன்மாவின் சாளரமே கண்கள். (The eyes are the window of the soul)
  • எங்கு சென்றாலும் நயன பாசை ஒன்றே. (The eyes have one language everywhere)
  • கண்கள் தம்மையே நம்புகின்றன காதுகள் பிறரை நம்புகின்றன. (The eyes believe themselves the ear believe others)
  • கண்ணால் காணாததற்கு இதயம் ஏங்காது. (What the eye sees not the heart craves not)
  • கேட்டதைச் சொல்லும் இரு சாட்சிகைள விட கண்ணால் பார்த்த ஒர சாட்சி மேல். (One eyewitness is better than two hearsay)

கலை (ART)

  • கலை ஒரு பொருள் அன்று அது ஒரு நெறி. (Art is not a thing it is a way)
  • கலை கலைக்காகவே பயன்பாட்டிற்கல்ல பயன்பாட்டிற்கென்றால் கலை நெறி பிறழும். (Art for arts sake and with no purpose any purpose perverts art)
  • கலை சோறூட்டாவிட்டாலும் சோர்வூட்டாது. (Art is indeed not the bread but the wine of life)
  • கலைகள் அனைத்தும் இயற்கையின் நகலே. (All art is but imitation of nature)
  • கலைக்குப் பகை அறியாமையே. (Art hath an enemy called ignorance)
  • கலைஞனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. (He who has an art has everywhere a part)
  • காலம் கடிது கலையோ நெடிது. (Art is long and time is fleeting)
  • சொல்லாமல் சொல்வதே ஓவியம். (A picture is a poem without words)
  • வாழ்க்கைக்கு வடிவம் அளிப்பதே கலையின் நோக்கம். (The object of art is to give life a shape)
  • வாழ்வு சிறிது வளர்கலை பெரிதே! (Life is short but art is long)

கல்வி (EDUCATION)

  • கல் மனம் போல் பொல்லாப்பில்லை கற்ற மனம்போல் நற்பேறில்லை. (Nothing so much worth as a mind well educated)
  • கல்விக்கு ராசபாட்டை கிடையாது (வருதப்பட்டால் தான் கற்க முடியும்). (There is no royal road to learning)
  • கல்வியால் பரவும் நாகரிகம். (Education is the transmission of  civilization)
  • கல்வியே நாட்டின் முதல் அரண். (Education is the chief defense of a nation)
  • கற்காதவன் அறியாதவன். (Learn not and know not)
  • கற்கையில் கசப்பு கற்றபின் இனிப்பு. (Knowledge has bitter roots but sweet fruits)
  • கற்பதற்கு வயதில்லை(கால எல்லை இல்லை). (Never too late to learn)
  • தீய பண்பைத் திருத்திடும் கல்வி நல்ல பண்பைப் பொலிவுறச் செய்யும். (Education polishes good nature and corrects bad ones)

கவலை(அக்கறை) (CARE)

  • (i) வாய் சர்க்கரை கை பொக்கரை (ii) கவலைப்பட்டால் மட்டும் கடன் தீர்ந்துவிடுமர் (A pound of care will not pay an ounce of dept)
  • (i) விரிசலைச் சரிசெய்து விட்டால் உடைவது தப்பும் (ii) காலத்தே களையெடுத்தால் பயிருக்கு பாதுகாப்பு. (A stitch in time saves nine)
  • அக்கறை போனால் சிகிச்சையும் போகும். (Past care past cure)
  • அதிக்க கவலை அழிவில் முடியும். (Care killed the cat)
  • வாலிபம் இன்பத்தால் நிறையும் வயோதிகம் கவலையால் நிரம்பும். (Youth is full of pleasure Age is full of care)

கழுதை (ASS)

  • (i) தங்கப்பொதி சுமந்தாலும் கழுதை கழுதைதான் (ii) கோபுரத்தில் அமர்ந்தாலும் குருவி குருவிதான். (An ass is an ass though laden with gold)
  • அதிகம் கத்தும் கழுதை அதிகம் தின்னாது. (The ass that brays most eats less)
  • தங்கப் பொதி சுமந்த கழுதை தடையின்றி உப்பரிகை ஏறும். (An ass loaded with gold climbs the top of castle)
  • பலருக்குச் சொந்தமான கழுதை ஓநாய்களுக்கு இரையாகும். (The ass of many owners is eaten by wolves)

கள்ளங்கபடமின்மை (INNOCENT)

  • அப்பாவிக்கும் அழகிக்கும் தாமே எதிரி. (The innocent and the beautiful have no enemy but themselves)
  • அழகிய உடற்கட்டிற்கு விருப்புவெறுப்பற்ற காலம் வீரனையும் அப்பாவிகளையும் கண்டால் பொறாது. (Time is intolerant of the brave and innocent and indifferent to beautiful physique)
  • குற்றம் புரியாத அப்பாவி ஒருவன் துன்பப்படுவதைவிடப் பத்துக் குற்றவாளிகள் தண்டனைக்குத் தப்புவது மேல். (It is better ten guilty persons escape punishment than one innocent suffer)

கற்றல் (LEARNING)

  • (i) வீட்டையும் நிலத்தையும் விடக் கற்பது மேல் (ii) கல்வியே சிறந்த செல்வம். (Learning is better than house and land)
  • இளமையிற கல் நேர்மையைக் கல். (Learn young learn fair)
  • உன் தவறுகளிலிருந்து நீ கற்றுக்கொள். (Learn from your mistakes)
  • கல்லாதவன் எதையும் தெரிந்து கொள்ளாதவன். (Learn not and know not)
  • கல்வி மனிதனைத் தனக்கே தகுந்த தோழனாக்கும். (Learning makes a man fit companion for himself)
  • கற்பதற்கு வயது கிடையாது. (It is never too late to learn)
  • கற்பிக்கும் போதே கற்கிறார்கள். (Even while they teach they learn)
  • கற்றல் மனத்தைத் தூய்மைப்படுத்தி உயர்த்தி விடும். (Learning refines and elevates the mind)
  • கற்றவன் அதை விட்டுவிட அல்லல்படுவான். (He who has learned unlearns with difficulty)
  • கேள்விகள் கேட்பவனே படிப்பாளி ஆகிறான். (A man becomes learned by asking questions)
  • துன்பப்படாமலும் அவமானப்படாமலும் எவரும் கற்க முடியாது. (No man learns but by pain or shame)
  • தோற்பதால் கற்கிறோம். (One learns by failing)
  • நல்லது செய்யும் ஊதாரித்தனத்தைக் கற்றுக் கொள். (Learn the luxury of doing good)
  • நன்மையில்லாததைச் செய்ய கற்காதே. (Do not learn to do that from which there is no advantage)
  • படிப்பாளி எப்போதும் தன்னுள்ளே செல்வத்தைக் குவிப்பான். (The learned man has always riches in himself)
  • மற்றவர் அனுபவத்தில் கற்பது நன்று. (It is good to learn at other men cost)
  • விரைவில் கற்றது விரைவில் மறக்கும். (Soon learnt soon forgotten)

காணல் (FIND)

  • மறைத்து வைப்பவன் கண்டுபிடிப்பான். (He that hides can find)
  • மனம் நினைப்பதை முகத்தில் காணும் கலை அரிது. (There is no art to find minds construction in the face)
  • முயல் தேடு காண் பணியாதே. (To strive to seek to find and not to yield)

காதல் (LOVE)

  • (i) எவன் நன்கு தண்டிக்கிறானோ அவனே நன்கு காதலிப்பான் (ii) அடிக்கிற கையே அணைக்கும். (He loves well who chastises well)
  • (i) கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் (ii) காதல் ஆபத்திற்கு அஞ்சவதில்லை. (Love fears no danger)
  • (i) மனம் இருந்தால் மார்க்கமுண்டு (ii) காதல் வழியைக் கண்டுபிடிக்கும். (Love will find the way)
  • (போலி) அன்புக்காகவே ஓநாய் ஆட்டை விழுங்குகிறது. (For love the wolf eats the sheep)
  • அழ வைப்பவனே நன்கு காதலிப்பான். (He loves thee well who makes thee weep)
  • ஆன்மா வாழ்கின்ற இடத்தில் இல்லை காதலிக்கும் இடத்தில்தான். (The soul is not where it lives but where it loves)
  • உணர்ச்சிமிக்க காதல் அவசரப் பழி தீர்த்தல். (Hot love is hasty vengeance)
  • உணவும் மதுவும் இன்றி காதல் இல்லை. (No love without bread and wine)
  • ஒருபோதும் மறக்காதவனே நன்கு காதலிப்பவன். (He loves well who never forgets)
  • காதலரின் பொய் வாக்குறுதி காதலைச் சிரிக்கவே வைத்திடும். (Love but laughs at lovers perjury)
  • காதலுக்கு கண் இல்லை. (Love is blind)
  • காதலைப் போன்றே காதலிக்கப்பட்டவரும் இருப்பர். (As is the love so is the beloved)
  • காதல் தெய்வீகமானது. (Love is divine)
  • காதல் பெற்றெடுத்திடும் காதல். (Love begets love)
  • தடைகள் காதலை வளர்க்கும். (Love grows with obstacle)
  • தேனினும் விசத்திலும் காதல் மிகுந்திருக்கும். (Love abounds in honey and poison)
  • பணிகளில் பார்கலாம் நேசத்தையும் விசுவாசத்தையும். (Love and faith are seen in works)
  • பழங்காதல் துருப்பிடிக்காது (பளபளக்கும்). (Old love does not rust)
  • பொறாமையின்றிக் காதல் இல்லை. (Love is never without jealousy)
  • பொன்னையும் காதல் விவகாரத்தையும் மூடி மறைத்திட முடியாது. (Gold and love affairs are hard to hide)
  • மதிப்பில்லாத இடத்தில் காதல் போய்விடும். (Where we do not respect we cease to love)
  • மதிப்பும் காதலும் ஒருபோதும் விற்பனைச் சரக்கல்ல. (Esteem and love were never to be sold)
  • மறைந்துள்ள பாதைகளை காதல் அறியும். (Love knows hidden paths)
  • யாரையும் அதிகம் நேசிக்கிறோமோ அவரிடம் குறைவாகவே சொல்கிறோம். (Whom we love best to them we can say least)
  • விசிறிய தீயும் கட்டாயக் காதலும் இன்றுவரை நன்கு நடைபெற்றதில்லை. (Fanned fire and forced love never did well yet)

காது (EAR)

  • (i) எல்லோரிடமும் கேள் சிலருக்கு மட்டும் கூறு (ii) சொல்வதினும் கேட்டல் நன்று. (Give every man thine ear but few the voice)
  • (i) பசித்தவன் உபதேசம் கேட்கமாட்டான் (ii) பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். (Hungry bellies have no ears)
  • அத்துமீறி அதிகமானால் அனைவர் செவிக்கும் எட்டும். (Where more is meant that meets the ear)
  • மண்ணாள்வோனுக்கு வேண்டும் ஆயிரம் காதும் கண்ணும். (Kings have many ears and many eyes)

குடி (DRINK)

  • (i) சாராயத்தை ஊற்றிப் பூராயத்தைக் கேள். (ii) குடிகாரனும் முட்டாளும் பொய் பேச முடியாது. (Drunkards and fools cannot lie)
  • குடிகாரனுக்குப் பொல்லாப்புப் புரியாது. (Drunken folk seldom take harm)
  • குடிகாரனைத் தனியே விட்டால் தள்ளாடித் தானே விழவான். (Let but the drunkard alone and he will fall off himself)
  • குடியும் செல்வமும் புத்திசாலியின் நடத்தையை மாற்றும். (Wine and wealth change wise mans manners)
  • சாப்பாட்டிற்கு இடையே குடிக்காதே. (Do not drink between meals)
  • போதையில் மூழ்கினால் வார்த்தைகள் நீந்தும். (When wine sinks words swim)
  • மதுவில் நம்பிக்கை உள்ளது. (There si trust in wine)
  • மொந்தைக் குடியன் மொடாக் குடியனாகி விடுவான். (He who drinks a little too much drinks much too much)
  • விரும்பியபடி சாப்பிடு அளவாகக் குடி. (Eat at pleasure drink by measure)
  • விவேகம் மறைப்பதை குடிபோதை வெளிப்படுத்தும். ( Wat soberness conceals drunkenness reveals)

குடும்பம் (FAMILY)

  • (i) ஒவ்வொரு மந்தையிலும் கறுப்பாடு ஒன்று உண்டு (ii) ஒவ்வொரு குடும்பத்திலும் ஒழுங்கீனன் இருப்பான். (There is a black sheep in every flock)
  • ஒன்றாக வழிபடும் குடும்பம் ஒரு நாளும் பிரியாது. (The family that prays together stays together)
  • கோவேறு கழுதையே குடும்பத்தை மறுக்கும். (None but a mule denies his family)
  • சந்ததி பயன்பெற சால விருட்சம் நடுவோம். (Walnut and pears you plant for your heirs)
  • சந்தோசமான குடும்பங்கள் ஒன்றுபோல இருக்கும் சந்தோசம் இல்லாவிட்டால் வேறுவேறாய் இருக்கும். (All happy families resemble one another each unhappy family is unhappy in its ones way)
  • சந்தோசமான குடும்பமே தரணியில் சொர்க்ம். (A happy family is an earlier heaven)
  • சிறிய குடும்பமே செல்வக் குடும்பம். (A small family is soon provided for)
  • நாட்டைவிடக் குடும்பம் புனிதமானது. (Family is more sacred than the state)
  • விதி தேர்வது உறவு நாம் தேர்வது நட்பு (Fate chooses your relations you choose your friends)

குதிரை (HORSE)

  • குதிரையைத் தொட்டிக்கு அழைத்துச் செல்லலாம் ஆனால் குடிக்க வைக்க முடியாது. (You may lead a horse to water but cannot make him drink)
  • திராய் வீரர்களே! குதிரையை நம்பாதீர். (Do not trust the horse Trojans)
  • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினதே சாக்கு. (Slip is an excuse for the lame horse)
  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. (Do not enter a stream on a clay horse)
  • லொட லொட என ஆடும் லாடத்திற்கு ஆணி அறைய வேண்டும். (The horse shoe that clatters wants a nail)

குருடு (BLINDNESS)

  • (i) ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை (ii) குருட்டு ராச்சியத்தில் ஒற்றைக்கண்ணன் அரசன். (In the kingdom of the blind one eyed man is king)
  • காணக் காத்திருப்பவனைப் போலக் குருடனானவன் வேறில்லை. (There is none so blind as they wait to see)
  • குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் கோபுரத்தில் முட்டிக்கொள்ள வேண்டியதுதான் (குடுகுடு பள்ளத்தில் விழ வேண்டியதுதான்) (If the blind lead the blind both shall fall into a ditch)
  • குருடன் நிறத்தைக் கூற முடியுமர் (A blind man cannot judge colors)

குரைத்தல் (BARKING)

  • அதிகமாகக் குரைப்பான் அரிதாகவே கடிப்பான். (His barking is worse than his bite)
  • குரைக்கிற நாய் கடிக்காது. (A barking dog seldom bites)

குழந்தைகள் (CHILDREN)

  • (i) காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு (ii) எல்லாத் தாய்க்கும் தன் குழந்தையே அழகு. (There is only one pretty child in the world and every mother has  it)
  • (i) மலடிக்கு வருமா மழலைமேல் அன்பு (ii) பிள்ளை பெறாதவனுக்கு அன்பு தெரியாது. (He that has no children knows not what is love)
  • அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான். (Spare the rod and spoil the child)
  • இன்றைய குழந்தைகள் நாளைய மனிதன். (The child is the father of man)
  • எலும்புந் தோலுமாய்க் குழந்தையை வளர்க்காதே. (Let not a child sleep upon bones)
  • ஒவ்வொருவரும் தன் கடந்த காலத்தின் குழந்தையே, (Everyone is the child of his past)
  • குழந்தைகளைக் கேட்டறிவதிலும் பார்த்தறிவதே மேல். (Children should be seen and not heard)
  • குழந்தைக்கும் முட்டாளுக்கும் பொய் சொல்லத் தெரியாது. (Children and fools cannot lie)
  • குழந்தையின் மீது எதையும் திணிக்காதே அதுவாகப் பற்றம்படி அறிவு கொளுத்து. (A child is not a vase to be filled but a fire to be lit)
  • குழந்தையும் கோழிக்குஞ்சும் எப்போதும் பொறுக்கும். ( Children and chicken must always be picking)
  • சிறுவர்கள் எல்லாம் பெரியவர்கள் ஆவர். (Boys will be men)
  • மழலைச்செல்வமே ஏழையின் செல்வம். (Children are poor mans riches)
  • மனைவி வரும்வரையே மகன் வாழ்நாள் எல்லாம் மகள். (A son is a son till he gets him a wife but a daughter is a daughter all the days of her life)

குறைபாடு (IMPERFECTION)

  • (CRIME)
  • உயிரில்லாதவனே குறையில்லாதவன். (He is lifeless that is faultless)
  • ஏதும் செய்யாதவனே தவறு செய்யாதவன். (He who makes no mistakes makes nothing)
  • ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பலவீனம் உண்டு. (Every man has his weakness)
  • களைகள் இல்லாத தோட்டம் இல்லை. (No garden without its weeds)
  • தவறு செய்யாத மனிதன் இல்லை. (No man is infallible)
  • திருடிய மாங்காய் இனிக்கும். (stolen waters are sweet)
  • மிகச் சிறந்தவற்றையும் தவறாகப் பயன்படுத்தலாம். (The best thing may be abused)
  • முள்ளில்லாத நல் ரோசா இல்லை. (No rose without thorn)

குற்றம் (CRIME)

  • குற்றத்தன்மை எப்போதும் கோழையே. (Guilt is always cowardly)
  • குற்றம் எப்போதும் வெறிபிடித்தது. (Guilt is always zealous)
  • குற்றம் வீரனைக் கோழையாக்கும். (Guilt sinks the brave to cowards)
  • குற்றவாளி இன்னும் தன் தகுதியைச் சந்தேகிப்பான். (Guilty man still suspect what they deserve)
  • குற்றவாளி பிறரையும் குற்றவாளி எனக் கருதுவான். (Guilt men still judge others like him)
  • குற்றவாளியின் காதுகள் கேட்ட மாத்திரத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள சுறுசுறுப்பாக இயங்கும். (Guilty man has quick ears to confess)
  • கொல்லைப்புறக் கதவு வீட்டையே திருடி விடும். (The back door robs the house)
  • சிறு திருட்டை மூடப் பெருந் திருட்டை செய். (Criminals are made secure by great crimes)
  • தினை திருடுபவன் பனை திருட மாட்டானர் (He that will steal an egg will steal an ox)
  • மகனை ஒன்றுக்கும் உதவாதவனாய் வளர்ந்திருந்தால் திருடனாவான். (He that brings up his son to nothing breeds a thief)

கேடு (EVIL)

  • (i) தான் மடிந்தாலும் தான் செய்த கேடு மறையாது (ii) தான் போன பின்பும் தன் கேடு நிற்கும். (The evil that men do lives after them)
  • (i) வினை விதைத்தவன் வினை அறுப்பான் (ii) கேடு பயக்கும் கேடு. (Evil begets evil)
  • இரு தீமைகளில் குறைந்ததைத் தேர்ந்தெடு. (Of the two evils the less is always to be chosen)
  • எல்லாக் கேடுகளின் மூலமும் பணமே. (Money is the root of all evils)
  • கெடுவான் கேடு நினைப்பான். (Evil to be him who evil thinks)
  • கெட்ட செய்தி விரைந்து ஓடும் நல்ல செய்தி பின் தங்கும். (Evil news rides fast while good news waits)

கேட்டல் (ASKING)

  • (i) உரத்துக் கேட்காதவன் மறுப்பைப் பெறுவான் (ii) உரத்துக் கேட்காவிட்டால் ஊர் எதுவும் தராது. (He that asks faintly begs a denial)
  • (i) வழி தவறுவதை விட வழிகேட்பது மேல் (ii) வாயுள்ள பிள்ளை வழி தேடிக் காணும். (Better to ask the way than go astray)
  • (i) தட்டிக்கேட்க ஆள் இல்லாவிடில் தம்பி சண்டப் பிரசண்டன் (ii) ஏனென்று கேட்காவிட்டால் எடுத்து எறிந்து போடுவார்கள். (If you don’t ask why you will be overridden)
  • கேட்கத் தயங்கி எதையும் இழக்காதே. (Lose nothing for want of asking)
  • கேள் கொடுக்கப்படும் தட்டு திறக்கப்படும். (Ask and it shall be given to you)
  • கேள்வி கேட்கப்படும் முன் விடையைக் கொடுக்காதே. (Never answer a question until it is asked)
  • கொஞ்சம் பெற விஞ்சக்(அதிகம்) கேள். (Ask much to have a little)
  • தாமதங்கள் மறுப்புகள் ஆகா. (Delays are not denials)

கொடுத்தல் (PAYING)

  • (i) சம்பாதிக்கின்ற கையே கொடுக்க முடியும். (ii) சேகரிக்கும் கையே கொடுக்கும். (The hand that gives oft gathers)
  • (i) தாமதித்துக் கொடுப்பதும் மறுப்பதும் ஒன்றே. (ii) ஓதக்கோள் நாளையினும் வாதக்கோள் இல்லை இனிது. (To refuse and to give tardily is all the same)
  • உடனே கொடுத்தவன் இருமடங்கு கொடுத்தவனாவான். (He gives twice who gives quickly)
  • கூலியில்லா வேலை கொடுந் தண்டனை. (Service without reward is punishment)
  • பெறுவதினும் கொடுத்தல் நன்றே. (It is more blessed to give than to receive)
  • மற்றவர்களுக்குக் கொடுப்பவன் தனக்குத் தானே கொடுத்துக் கொள்கிறான். (He who gives to another bestows on himself)
  • விவேகத்தோடு கொடுப்பவன் நேரடியாகப் பயன்பெறுவான். (He who gives discreetly gains directly)

கொல் (KILL)

  • இருப்பினும் மனிதன் தான் நேசித்ததையே கொல்லுகிறான். (Yet each man kills the thing he loves)
  • கொடிய விலங்குகள் விளையாட்டுக்காகக் கொல்லாது. (Wild animals never kill for support)
  • நேரத்தைக் கொல்வதாக மனிதன் சொல்வான். ஆனால் நேரம் மனிதனை மௌனமாய்க் கொல்கிறது. (Men talk of killing time while time quietly kills them)

கோபம் (ANGER)

  • (i) மௌனம் கோப அழிவிடம் (ii) துருத்தி தீயை மூட்டும் கோபத்தை மூட்டும். (As fire is kindled by bellows so is anger by words)
  • உன்னால் உதவ முடியும் போதும் உதவ முடியாத போதும் ஒருபோதும் கோபங்கொள்ளதே. (Two things a man should never be angry at what he can help and what he cannot help)
  • கேட்பதற்கு விரை பேசுவதற்கு நிதானி கோபத்திற்குச் சுணங்கு. (Be swift to hear slower to speak still slower to wrath)
  • கோபம் அரைப் பைத்தியம். (Anger is short madness)
  • கோபம் வருங்கால் பத்து வரை எண்ணு அதிகக் கோபம் எண்றால் நூறு வரை எண்ணு. (When angry count ten when very angry count hundred)
  • கோபி முடியாததையும் செய்ய முடியும் என நினைப்பான். (The angry man always thinks he can do more than he can)
  • கோழைகள் பலமுறை மடிவர் வீரனுக்கு மரணம் ஒருமுறைதான். (Cowards die many times but the brave die only once)
  • கோழைகள் வரலாறு படைப்பதில்லை. (Of cowards no history is written)
  • தண்டிக்கும் போது கோபம் கொள்ளாதே. (Anger is to be avoided in inflicting punishment)
  • தன்னையே கொல்லும் சினம். (Anger punishes itself)

கோழைத்தனம் (COWARDICE)

  • அபாயங்களை முன்னறிவிப்பவன் ஆற்றுவனோ வீரப் பயணம்? (He that forecasts all perils will never sail the sea)
  • இறப்பதை விட ஒரு கணம் கோழையாக இருந்து உயிர் பிழைப்பது மேல். (It is better to be a coward for a minute than dead for the rest of your life)
  • எளியாரை வாட்டுபவன் எப்போதும் கோழையே. (A bully is always a coward)
  • கோழையை எழுச்சிபெறச் செய்தால் பேயோடும் போரிடுவான். (Put the coward to his mettle and he will fight the devil)
  • போரிட்டு ஓடுபவன் இன்னொரு நாள் போரிட உயிரோடிருப்பான். (He that fights and runs away may live to fight another day)

சட்டம் (LAW)

  • அயோக்கியர்களுக்காக ஆக்கப்பட்டதுதான் சட்டம். (Laws were made for rogues)
  • ஈ யை பிடிக்கும் சட்டம் குளவியைக் கோட்டைவிடும். (Law catches flies and lets hornets to go)
  • உடைக்கப்படவே ஏற்பட்டது சட்டம். (Laws were made to be broken)
  • காலைக்கொரு சட்டம் மாலைக்கொரு சட்டம். (The law is not the same at morning and night)
  • சட்டம் அதிகமானால் நியாயம் குறையும். (The more the laws the less the justice)
  • சட்டம் இயற்றுவோர் அதை மீறுபவர்களாக இருக்கக் கூடாது. (Law makers should not be law breakers)
  • சட்டம் சட்டத்தைத் தவிர அனைத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது. (The law guards us from all evil but itself)
  • சட்டம் சில சமயம் தூங்கும் ஆனால் ஒருபோதும் சாகாது. (The laws sometime sleep but never die)
  • சட்டம் பெருகினால் குற்றமும் பெருகும். (The more the laws the more offenders)
  • சட்டம் மதியால் உருவாக்கப்படுகிறது அதை ஏய்ப்பது சதியால் உருவாக்கப்படுகிறது. (The law devised its evasion contrived)
  • தண்டிக்க முடியாத சட்டம் இணக்கத்தை ஏற்படுத்தாது. (Law cannot persuade where it cannot punish)
  • பணக்காரனுக்கு ஒரு சட்டம் ஏழைக்கு ஒரு சட்டம். (One law for the rich and another for the poor)
  • பணக்காரன் சட்டத்தை ஆள்கிறான் ஏழை அதில் அடைபட்டுச் சாகிறான். (Laws grind the poor and rich men rule the law)
  • மன்னன் நெறிப்படியே சட்டம் செல்லும். (Law goes the way king directs)

சந்தேகம் (DOUBT)

  • அதிகம் தெரிந்தவர் சந்தேகப்படார். (Who knows most doubts not)
  • ஒருவருக்கும் நிச்சயமாய்த் தெரியாததை சந்தேகப்படாதே. (Let us never doubt what nobody is sure about)
  • சந்தேகம் செயலை அழிக்கும். (Doubt destroys deed)
  • நம் சந்தேகங்களே நம்மை இழுத்துச் செல்லும். (Our doubts are tractors)

சமத்துவம் (EQUALITY)

  • (i) சூரிய ஒளிக்கு பேதம் உண்டேர் (ii) வெண்ணிலா வழங்கிடும் எல்லோர்க்கும் தண்மையை. (The sun shines upon all alike)
  • ஆலயம் சத்திரம் சவப்பெட்டி இங்கெல்லாம் யாரே உயர்ந்தவர்? யாரே தாழ்ந்தவர்? (In church in an inn and in a coffin all men are equal)
  • இரத்தம் ஒரே நிறம். (Human blood is all of a colour)
  • எல்லாப் பெண்களும் இருட்டினில் ரதியே. (All cats are grey in the dark)
  • சமத்துவம் சுதந்திரத்தின் மூலத் தத்துவம். (Equality is the primordial condition of liberty)
  • முடிமகனும் குடிமகனும் சம மகனே. (A cat may look at a king)
  • வட்ட மேசையில் இடச் சண்டை இல்லை. (At a round table there is no dispute of place)

சனநாயகம் (DEMOCRACY)

  • ஆள்வோர் அரக்கராய் மாறும் முன்னர் அவர்களை மாறவல்ல சனநாயகமே ஆட்சியுள் சிறந்தது. (Democracy is the best form of government because it can change its masters before they become monsters)
  • உலகம் சனநாயகத்தின் அரணாக்கப்பட வேண்டும். (The world must be made safe for democracy)
  • சனநாயகமே படுமோசமான அரசாங்கம் துரதிருச்டவசமாக அதற்கு ஒரு மாற்று இன்னும் அறியவில்லையே நாம். (Democracy is the worst form of Government but unfortunately we do not know better than that)
  • பல மன்னர் சூழ்ந்தலைக்கும் மன்னன் இல்லா ஆட்சியே மக்கள் ஆட்சி. (Democracy is a kingless regime infested with many kings)
  • மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்கள் அரசாங்கமே சனநாயகம். (Democracy is the government of the people by the people and for the people)

சாக் (JACK)

  • இரு பக்கத்திலும் இருப்பவன் சாக். (Jack is both sides)
  • எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு எதுவும் சரியாகத் தெரியாது. (A jack of all trades is master of none)
  • காதலிப்பவனுக்கு அழகு தெரியாது. (If jacks in love he is no judge of jills beauty)
  • சாக்கர் சீட்டு எல்லோருக்கும் பொதுவானது. (Jack is common to all that will play)
  • முதலாளியும் தொழிலாளியும் சமம். (Jack is as good as his master)

சிக்கனம் (FRUGALITY)

  • சேமிப்பே உங்கள் முதல் செலவாக இருக்கட்டும். (Let savings be your first expenditure)
  • பைசா சேர்த்தால் ரூபாய் பல ஆகும். (A penny saved is a penny gained)
  • பைசாவைக் கவனித்துக் கொண்டால் ரூபாய் தானே வரும். (Take care of the penny and pounds will take care of themselves)

சிரிப்பு (LAUGH)

  • இறுதியில் சிரிப்பவனே நன்றாகச் சிரிப்பான். (He laughs best who laughs last)
  • சிரிப்பே சிறந்த மருந்து. (Laughter is the best medicine)
  • சொர்க்கத்திற்குப் போகிறவன் சிரித்துக்கொண்டே போவான். (Men go laughing to heaven)
  • நீ சிரித்தால் உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும் நீ அழுதால் நீ மட்டுமே அழ வேண்டும். (Laugh and the world laughs with you weep and you weep alone)
  • வெற்றி பெற்றோர் சிரிக்கட்டும். (Let them laugh that win)

சிறந்தது (BEST)

  • எல்லாம் நன்மைக்கே. (All is for the best)
  • ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி. (Make the best of a bad bargain)
  • காலத்தின் அருமை அறிந்தவர் அதை வீணாக்கமாட்டார். (Those that make the best of time have none to spare)
  • குறைந்த கட்டுப்பாடுகள் உடைய அரசாங்கமே மிகச் சிறந்த அரசாங்கம். (The best government is that which governs least)
  • சாலச் சிறந்தது நல்லதன் பகையே. (The best is the enemy of good)
  • நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதில் ஐயம் ஏதும் இல்லை. (No doubt everything is for the best)
  • நல்லது நடக்கும் என நம்பு தீயதை எதிர்கொள்ளத் தயாராயிரு. (hope for the best and prepare for the worst)

சிறியது (LITTLE)

  • (i) உடல் சிறியராயினும் மனம் பெரியர் (ii) சிற்றுடலிலும் பெருமனம் குடியிருக்கும் (இ) மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது. (A little body often harbours a great soul)
  • (i) சிறிய வெட்டுகளால் பெருமரமும் சாயும் (ii) சிற்றுளியால் மலையும் தகரும். (Little strokes fell great oaks)
  • அரைகுறை அறிவு ஆபத்தானது. (A little knowledge is a dangerous thing)
  • அற்ப விசயங்களே சிறிய மனங்களை உலுக்கும். (Little things affect little minds)
  • சிறு துளி பெருவெள்ளம். (Little drops of water make the mighty ocean)

சுதந்திரம் (LIBERTY)

  • அளவு மீறிய சுதந்திரம் அனைவரையும் கெடுக்கும். (Too much liberty spoils all)
  • கொழுத்த அடிமையினும் மெலிந்த சுதந்திரம் மேல். (Lean liberty is better than fat slavery)
  • சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடுகள் உண்டு ஆனால் எல்லைகள் இல்லை. (Liberty has restraints but no frontiers)
  • சுதந்திரம் எதையும் செய்யும் உரிமம் அன்று. (Liberty is not licence)
  • சுதந்திரம் என்பது பொறுப்புணர்வு எனவே அதற்கு அநேகர் அஞ்சுவர். (Liberty means responsibility. That’s why most men dread it)
  • சுதந்திரம் கொடு இல்லையேல் மரணம் கொடு. (Give me liberty or give me death)

சுருங்கக் கூறல் (BREVITY)

  • சுருங்கக் கூறலே அறிவின் ஆன்மா. (Brevity is the soul of wit)
  • பல சொன்னாலும் மக்கள் மனதில் சிலவே நிற்கும். (The more you say the less the people remember)

சூதாட்டம் (GAMBLING)

  • சீட்டாட்டத்தில் அதிர்ஷ்டம் காதலில் துரதிருச்டம். (Lucky at cards unlucky in love)
  • சூதாட்டத்தை வீசி எறிவதே சிறந்த பகடை வீச்சு. (The best throw of the dice is to throw them away)
  • பணத்தை வைத்து ஆடுபவன் அதை மதிப்பிடக்கூடாது. (He that plays his money ought not to value it)
  • பந்தயத்தில் ஒருவன் முட்டாள் மற்றவன் திருடன். (In a bet there is a fool and a thief)

செயல் (ACTION)

  • ஆழ்ந்து ஆராய்தல் பலர் பணியாயினும் செய்து முடித்தல் ஒருவன் பணியே. (Deliberation is the work of many men action of one alone)
  • உலகமே மூழ்கினும் நல்லதைச் சரியாகச் செய். (Do well and right and let the whole world sink)
  • உழைக்கக் கற்றபின் பொறுக்கக் கற்க. (Learn to labour and to wait)
  • ஒவ்வொரு விழுமிய செயலும் பழுதின்றி நிற்கும். (Every noble activity makes room for itself)
  • செயல்படாதிருத்தல் செம்மையுற முடியாது. (Nobody can become perfect by merely ceasing to act)
  • செய்தவினைதான் செய்யாததாகுமர் (What is done can not be undone)
  • துருப்பிடிப்பதை விடத் தேய்ந்து போவது மேல். (Better wear out than rust out)
  • நோக்கங்களே செயல்களின் உரைக்கல். (All actions are judged by the motives prompting them)
  • வாய்ச்சொல்லைவிட செயலின் குரலே உரக்க ஒலிக்கும். (Action speaks louder than words)
  • வெற்றிச் செயலே விளைபயன் ஆகும். (Successful action tends to become an end in itself)

செயல்கள் (DEEDS)

  • (i) வாய் ஒன்று சொல்லும் கையொன்று செய்யும் (ii) சொல்வது வேறு செய்வது வேறு. (Saying is one thing and doing another)
  • இலட்சியமே செயலின் அளவுகோல். (Every deed is to be judged by the doers intention)
  • உறுதிகள் அளித்து ஒன்றும் செய்யாதவன் புதர் மண்டிய பூங்கா. (A man of words without deeds is like a garden full fo weeds)
  • கெட்ட செயல்கள் நாற்றம் போல மூடி மறைக்க முடியாதவை. (Evil deeds are like perfume difficult to hide)
  • கையாலாகாதவன் வாய் கிழியப் பேசுவான். (The greatest talkers are the least doers)
  • செயலின்றிப் பேச்சினிமை பயன் இன்மை ஆகிவிடும். (Good words without deeds are rushes and reeds)
  • செயல்களே மனிதனை அடையாளம் காட்டும். (By his deeds we know a man)
  • செயல்கள் தாம் நிலைக்கும் சொற்கள் மறைந்துபோகும். (Deeds will show themselves and words will pass away)
  • நற்செயல் என்றும் நிலைத்திருக்கும் (வீண் போவதில்லை). (A good deed is never lost)
  • நன்மை செய்வதால் நட்டம் ஏதும் இல்லை. (One never loses by doing a good turn)
  • வார்த்தைகள் வெறும் நீர்க் குமிழ்கள் செயல்களே தங்கத் துளிகள். (Words are mere bubbles of water but deeds are drops of gold)

செய் (DO)

  • ஊரோடு ஒத்து வாழ்ந்தால் ஊரார் உயர்வாய் மெச்சுவர். (Do as most men do and men will speak well of you)
  • செய் அல்லது செத்துமடி. (Let us do or die)
  • செய்தது கையளவு செய்ய வேண்டியது கடலளவு. (So much to do so little done)
  • தெரிந்ததை எல்லாம் சொல்லிவிடாதே முடிந்ததை எல்லாம் செய்தும் விடாதே. (Tell not all you know nor do all you can)
  • நன்றாகச் செய்தால் இருமுறை செய்ய வேண்டாம். (Do it well that you may not do it twice)
  • நன்றாகச் செய்தால் நல்லது பெறலாம். (Do well and have well)

செல்லுதல் (GO)

  • இளைஞனே மேலைநாடு போ. (Go west young man)
  • உள்ளூரில் கஞ்சி குடித்தவன் வெளியூர் சென்று வெறும் தண்ணீர் குடித்தானாம். (Go farther and fare worse)
  • கூடுவிட்டு ஆவி போவதெங்கே கூறு? (Men die and go we do not know where)
  • நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கையில் போய்விடு. (Go while the going is good)
  • மனிதர்கள் போவார்கள் வருவார்கள் நான் என்றும் இருப்பேன். (For men may come and men may go but I go on for ever)

சோம்பல் (IDLENESS)

  • (வேலையில்லாததால்) சோம்பேறிகளுக்கு ஓய்வில்லை. (Idle folks have the least leisure)
  • ஏதேனும் செய்வதைவிட எதுவும் செய்யாதிருப்பது கடினமானது. (It is more pain to do nothing than something)
  • கற்பின் உடைந்த கலமே சோம்பல். (Idleness is the shipwreck of chastity)
  • சோம்பல் வெறுங்காலால் நடப்பதற்கு தனக்கே நன்றி சொல்லிக் கொள்ள வேண்டும். (Idleness must thank itself if it goes bare foot)
  • சோம்பேறி ஆட்டுக்குத் தன் கம்பளம் சுமை. (A lazy sheep thinks its wool heavy)
  • சோம்பேறி என்பவன் பேயின் மெத்தை. (An idle person is a devils cushion)
  • சோம்பேறி மனம் பேயின் பட்டறை. (An idle mind is the devils workshop)
  • சோம்பேறிகளுக்கு எல்லா நாட்களும் விடுமுறையே. (Every day is holiday with sluggards)
  • சோம்பேறிக்குச் சாக்கு சுள்ளென வரும். (Idle folks lack no excuses)
  • சோம்பேறியே பிச்சை எடுப்பான். (Idleness is the key of beggary)

தகுதி (DESERVE)

  • ஆசைப்படாதவன் அல்லல்பட மாட்டான். (He who desires nothing will be free)
  • ஆசையின் வேகம் அனைத்தையும் பின் தள்ளும். (The winds are left behind in the speed of desire)
  • ஊக்கத்தோடு உழைத்தால் ஆக்கம் தேடிவரும். (He that serves well need not ask for his wages)
  • எலும்பு ஒடியப் பணி செய்தால் பல் ஒடியத் தின்னலாம். (A good dog deserves a good bone)
  • கொடுக்கும் கூலிக்கு ஏற்ற வேலையாள். (The labourer is worthy of his hire)
  • நன்றாக ஊதத் தெரிந்தவனே நாயனம் ஏந்துவான். (He that blows best bears away the horn)
  • முதலில் தகுதி பெறு பின்னர் விரும்பு. (First deserve then desire)
  • முதலில் விரும்பு பின்னர் அடை. (First desire then acquire)
  • விரும்பியது விரைவில் கிட்டும். (We soon receive what we desire)
  • வேகமாய் ஓடினால் மூச்சிறைக்காதர் (After you fling watch for the sting)

தந்திரம் (CUNNING)

  • அதிகத் தந்திரம் காரியத் தடையாம். (Too much cunning undoes)
  • கெட்டிக்காரன் பிழைக்க எட்டூர் செல்வான். (The fox preys farthest from his home)
  • தந்திர அயோக்கியனுக்குத் தரகர் தேவையர் (A crafty knave needs no broker)
  • நரியோடு பேரம் பேசத் தந்திரம் வேண்டாமர் (If you deal with a fox think of his tricks)

தந்தை (FATHER)

  • ஒரு தந்தை பத்து குழந்தைகளைப் பேணும் அளவுக்குப் பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைப் பேண முடியாது. (A father maintains ten children better than ten children one father)
  • தந்தை சாது மகன் போக்கிரி. (The father s a saint the son a devil)
  • தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. (No advice like a fathers)
  • தந்தை போல மகன். (Like father like son)
  • தந்தையிடமிருந்து மதிப்பு வரும் தாயிடமிருந்து வசதி வரும். (From the father comes honour from the mother comfort)
  • தந்தையின் நற்குணமே பிள்ளையின் சொத்து. (The fathers virtue is the childs best inheritance)
  • தந்தையை நாம் மதிப்பது போல மகன் நம்மை மதிப்பான். (We think our fathers fools so wise we grow our wiser sons will think us so)
  • தவறுகளைக் கண்டிக்கும் தந்தையே குழந்தைகளை நேசிப்பான். (A father loves his children in hating their faults)
  • தன் குழந்தையை தான் அறிபவன் அறிவாளி. (it is a wise father that knows his child)

தர்மம் (CHARITY)

  • (i) தருமம் தலைகாக்கும் தக்க தருணத்தில் துணை நிற்கும் (ii) தருமம் என்பதோர் இரட்டை ஆசீர்வாதம், (Charity is a double blessing)
  • ஏற்பதைவிட இடுவது சிறப்பு (It is most blessed to give than to receive)
  • கொடை பாவங்களை மறைக்கும் குடையாம். (Charity covers a multitude of sins)
  • தனக்கு மிஞ்சியே தானதர்மம். (Charity begins at home)
  • தான தர்மத்திற்கு அளவு இல்லை. (In charity there is no excess)
  • நம்மால் செய்ய முடிந்ததைச் செய்வதே தர்மம். (This only is charity to do all all that we can)
  • யாரிடமும் குரோதம் கொள்ளாதே எல்லோரிடமும் அன்புகொள். (With malice towards none with charity for all)

தவறு (ERROR)

  • அன்பு நலிந்தால் தவறு தடிக்கும். (Faults are thick where love is thin)
  • ஒப்புக்கொள்ளப்பட்ட தவறு பாதி பரிகாரமாகும். (A fault confessed is half redressed)
  • குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும். (He that commits faults thinks everyone speaks of it)
  • குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. (Be to her virtues very kind to her faults a little blind)
  • தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வீகம். (To err is human to forgive divine)
  • தவறு யாவர் கண்ணிலும் படும். (Error like straws upon the surface flow)
  • தவறே மனிதரைப் பற்ற வைத்திருக்கும் சக்தி. (Error is the force that welds men together)
  • புதிய உண்மையைவிடப் பழைய தவறே யாவருக்கும் தெரியும். (An old error is always more popular than a new truth)
  • பெரிய மனிதர்களின் குறைகளும் பெரிதே. (Great men have great defects)
  • விடுபட்டவையும் செய்த பிழைகளும் நீங்கலாக. (Omissions and commissions excepted)

தாமதம் (DELAY)

  • (i) நாளையினும் இல்லை இனிது (ii) நாளை என்பது நிச்சயமில்லை. (Tomorrow is a day that never comes)
  • அதிகத் தாமதத்தால் வலுவான நோய் மருந்தால் மெதுவாகவே தீரும். (It is late of medicine when disease has grown strong through long delays)
  • இன்று செய்ய முடிந்ததை நாளைக்கு ஒத்திப் போடாதே. (Never put off till tomorrow what you can do today)
  • இன்றைய ஒரு மணி நேரம் நாளைய இரு மணிக்கு சமம். (One hour today is worth two tomorrow)
  • உறுதியளித்துத் தாமதப்படுத்துபவன் நன்றி இழப்பான். (He loses his thanks who promises and delays)
  • காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது. (Time lost cannot be recalled)
  • செய்யாதிருப்பதைவிட தாமதித்துச் செய்வது மேல். (Better late than never)
  • தாமதம் ஆசைகளை போதிக்கும். (Desires are nourished by delay)
  • தீங்கைத் தவிர்க்கும் தாமதம் நன்றே. (That delay is good which makes the way safer)
  • மூன்று மணி என்பது செய்ய விரும்பியதைச் செய்ய எப்போதும் அதிகப் பிந்தியான அல்லது அதிகம் முந்தியான நேரம். (Three o clock is always too late or too early for anything you want to do)
  • விரைவில் தொடங்கினால் விரைந்து முடியும். (Sooner begun sooner done)

திருமணம் (MARRIAGE)

  • (i) பொருத்தமானவளைத் திருமணம் செய் (ii) பொருத்தம் பார்த்துத் திருமணம் புரி. (Marry with your match)
  • கால்கட்டுப் போட்டால் பெட்டிப் பாம்பு. (Marry and grow tame)
  • திருமண வாழ்வில் துன்பமுண்டு ஆனால் பிரம்மச்சாரி வாழ்வில் இன்பமில்லை. (Marriage has its pain but a bachelors life has no pleasure)
  • திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. (Marriages are made in heaven)
  • திருமணம் ஒரு குலுக்கல் சீட்டு. (Marriage is a lottery)
  • திருமணம் ஒரு சிறை. (Wedlock is a padlock)

திறமை (ABILITY)

  • (i) உயர்வாகக் கருதினால் உயர்ந்திட முடியும் (ii) திறமைசாலி என நினைத்தால் திறமைசாலி ஆகலாம். (Some are able because they think they are able)
  • ஒரு வித்தகனுக்குப் பின்னால் ஓராயிரம் வித்தகர்கள். (Behind an able man there are always other able men)
  • திறமைப்படி பெறு தேவைப்படி கொடு. (From each according to his abilities to each according to his needs)
  • மூச்சடக்கிக் காட்டினால்தான் முனியென ஏற்பார் (People are always ready to admit a mans ability after he gets there)
  • வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். (Do what you can with that what you have from where you are)
  • வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை? (Ability is of little account without opportunity)

தீ (FIRE)

  • அடுப்புக்கு நெருப்பு நல்லது. (Fire is good for the fireside)
  • கொழுப்பு எல்லாம் அக்னியில் ஆகுதியாகும். (All the fats in the fire)
  • நெருப்பின்றிப் புகையாது. (No smoke without fire)
  • பற்ற வைக்காவிட்டால் புகை எழாது. (Make no fire raise no smoke)

தீமை (BADNESS)

  • (i) பெருந்தீங்கிற்குத் தீங்கு மேலானது (ii) தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. (Nothing is bad but it might have been worse)
  • இரண்டு தவறுகள் ஒரு சரியாகாது. (Two wrongs do not make a right)
  • ஒரு தீமையிலிருந்து பிறக்கும் பல தீமைகள். (One ill breeds many)
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். (An evil deed has a witness in the bosom)
  • கெட்ட வேலி பயிரை மேயும். (Bad watch often feeds the wolf)
  • சாத்தானுடன் விருந்துண்ணச் சட்டுவம் நீண்டிருக்க வேண்டும். (He who sups with the devil should have a long spoon)
  • சிறு தீமைக்கு இடம் கொடுத்தால் பெருந்தீமை புகுந்துவிடும். (Never open the door for a little vice lest a great one enters with it)
  • செல்லாக்காசு திரும்பியே தீரும். (A bad penny always comes back)
  • தவறான வழியில் சம்பாதித்தால் தவறான வழியில் செலவழியும். (Ill got ill spent)
  • தவறான வழியில் வந்த பொருட்கள் செழிக்கா. (Ill gotten goods never thrive)
  • தீங்கு அழையாமலே நுழையும். (Mischief comes without calling for)
  • தீய களைகள் சீக்கிரம் விளையும். (Ill weeds grow apace)
  • தீய வளர்ப்பே திருடரை ஆக்கும். (Ill laying up makes many thieves)
  • தீயார் நட்பு அவர் பகையினும் கொடிது. (The love of the wicked is more dangerous than their hatred)
  • தீயார்க்குக் கருணை நல்லார்க்குக் கேடு. (He that spares the bad injures the good)
  • தீயோரிடமும் நல்லவை உண்டு நல்லோரிடமும் தீயவை உண்டு. (There is so much good in the worst of us and so much bad in the best of us)
  • துச்சனைக் கண்டால் தூர விலகு. (The best remedy against an ill man is much ground between)
  • நச்சுமரம் நற்கனி ஈனாது. (A bad tree does not yield good apples)
  • நல்லது வரும் என்று தீயதைச் செய்யாதே. (Never do evil that good may come of it)
  • பாவத்தில் வீழ்வது மனிதத்தனம் அதிலேயே தங்கியிருப்பது பேய்த்தனம். (To fall into sin is human to remain in sin is devilish)
  • பாவமே துயரத்தின் மூலம். (Sin is the root of sorrow)
  • புதருக்கு விதையிட வேண்டாம். (Weeds want no sowing)
  • மோசமான காவல்காரனுக்குத் திருடன் கண்ணில் படமாட்டான். (A bad dog never sees the wolf)

துயரம் (DESPAIR)

  • துயரம் சிலரைக் கெடுக்கும் ஊகம் பலரைக் கெடுக்கும். (Despair ruins some presumption many)
  • துயரம் வலிமையை இரட்டிப்பாக்கம். (Despair doubles our strength)
  • நரகத் துயரையும் அன்பால் ஆனந்தப்படுத்தலாம். (Love builds a heaven in hell’s despair)

துளி (DROP)

  • கடலில் துளி. (A drop in the ocean)
  • கடைசித்துளியில் பானை நிரம்பி வழியும். (The last drop makes the pot overflow)
  • சிறு துளி பெரு வெள்ளம். (Little drops of water make the mighty ocean.A)

துன்பம் (ADVERSITY)

  • (i) பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் (ii) துன்ப மழை தூறல் போடாது கொட்டித்தீர்த்துவிடும். (It never rains but it pours)
  • கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது. (Between the mouth and the morsel many things may happen)
  • தினைத் துன்பம் பனையாகும். (Of one ill come many)
  • துயரங்கள் பகைவரையும் ஒன்றுபடுத்தும். (Woes unite foes)
  • துன்பத்தின் பயன் இன்பமாகும். (Sweet are the uses of adversity)
  • துன்பமே ஒழுக்கத்தின் உரைகல். (Adversity is the touchstone of virtue)
  • துன்பமே போதிக்கும் நல்லாசான். (Adversity comes with instruction in its hand)
  • துன்பம் ஒருவனை செல்வனாக்காவிடினும் அறிவாளியாக்கும். (Adversity makes a man wise not rich)
  • போரில் வீரன் வெல்வது போல பெரியோர் துயரில் பெரிதும் மகிழ்வர். (Great men rejoice in adversity as brave soldiers triumph in war)

துன்பம் கடத்தல் (CROSS)

  • (i) சிலுவை இல்லையேல் மகுடமும் இல்லை (ii) துயர் இல்லையேல் முடியும் இல்லை. (No cross no crown)
  • (i) பாலம் வந்த பிறகே கடந்து செல் (ii) துயர் வந்த பின்பே வருந்து. (Cross your bridges when you come to them)
  • தடைகளே சொர்க்கத்தின்(இன்ப வாழ்வின்) ஏணிப்படிகள். (Crosses are ladders to heaven)
  • தானே தனக்குத் தடையாவதே தடைகளுள் பெருந்தடை. (The crab that our own hands fashion is the heaviest cross)
  • பல தடை கடந்தவன் வாழ்க்கையில் முன்னேறியவன். (A proved man hath many crosses)

துன்புறுத்தல் (CRUELTY)

  • கெடுவான் கேடு நினைப்பான். (Malice hurts itself most)
  • கொடியோனுக்குக் கருணை காட்டாதே. (Cruelty deserves no mercy)
  • துன்புறுத்துதலே கொடியோன் வலிமை. (Cruelty is the strength of the wicked)
  • பிறன்கேடு சூழ்ந்தால் தன்கேடு தானே சூழும். (He that hurts another hurts himself)
  • வல்லாங்கு பேசினாலும் பொல்லாங்கு செய்யாதவன். (He threatens many than hurts any)

தேர்ந்தெடுத்தல் (CHOOSING)

  • அதிக விலைக்கு விற்றாலும் எடையை குறைக்காதே. (Weigh justly and sell dearly)
  • கூழுக்கு ஆசைப்பட்டால் மீசையை மழித்துவிடு. (You cannot have it both ways)
  • கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை (You cannot have your cake and eat it too)
  • வாடிக்கையாளர் கணிப்பே சரி. (The customer is always right)
  • விலை கேட்கவே அஞ்சுபவன் நல்லதைக் குறைந்த விலைக்கு வாங்க முடியுமர் (He that is afraid to ask the price will never have a good thing cheap)

தொடக்கம் (BEGIN)

  • அது முடிவின் தொடக்கம். (It is the beginning of the end)
  • இறைவனுக்கு அஞ்சுவதே விவேகத்தின் தொடக்கம். (The fear of the lord is the beginning if wisdom)
  • இன்று தொடங்கு என்றும் முடிக்காதே. (Begin today end never)
  • நன்கு தொடங்குவது பாதி முடித்ததற்குச் சமம். (Well begum is half done)
  • மகா வித்வானும் அரிச்சுவடியில்தான் தொடங்க வேண்டும். (He that climbs the ladder must begin at the first rung)
  • முடித்தல் என்பது தொடங்குவது ஆகும். (And to make an end is to make a beginning)

தொலைத்தல் (LOSE)

  • எல்லாம் இழந்தபின் என்னைக் கண்டேன். (After having lost everything I found myself)
  • காதலர்கள் தொலைந்தாலும் காதல் தொலையாது. (Though lovers be lost love shall not)
  • கௌரவம் தவிர அனைத்தும் தொலைந்து போகலாம். (All is lost save honour)
  • நாம் இழந்துவிட்ட சொர்க்கங்களே உண்மையான சொர்க்கங்கள். (The true paradises are the paradises we have lost)

தொழில்(வேலை) (BUSINESS)

  • அனைவரின் வேலை எவனுடைய வேலையும் அல்ல. (Everybody’s business is nobody’s business)
  • இலாபம் இல்லாத வியாபாரம் இனிப்பில்லாத கற்கண்டு. (Business without profit is not business anymore than a pickle is a candy)
  • எண்ணெய் எண்ணெயுடனே கலக்கும் வியாபாரம் வியாபாரத்துடனேயே கலக்கும். (Business is like oil it wont mix with anything but business)
  • வாணிபம் என்பது பிறர் பணம். (Business is other peoples money)
  • வியாபாரத்தில் வெற்றி பெறத் துணிவுடன் இரு முதலில் இரு மற்றும் மாறுபட்டிரு, (To be a success in business be daring be first and be different)
  • வியாபாரம் என்ற பெயரில் ஏமாற்று அல்லது ஏமாறு. (Cheat or be cheated is something called business)

தோற்றம் (APPEARANCE)

  • (i) அழுக்கு அங்கியின் உள்ளும் உறைவான் அறிஞன் (ii) உருவத்தைப் பார்த்து எடைபோடாதே. (இ) பார்வைக்கு அகத்தியன் பராக்கிரமத்தில் அர்ச்சுனன். (Under a shabby cloak may be a smart thinker)
  • (i) இக்கரைக்கு அக்கரை பச்சை (ii) காண்பவை எப்போதும் காணப்பட்டவை போல் இரா. (Things are not always what they seem)
  • (i) சேற்றில் முளைக்கும் செந்தாமரை (ii)முள்ளில் ரோசா. (Under the thorn grow the roses)
  • (i) தின்னாவிட்டால் தெரியுமா தித்திப்பு புளிப்பு (ii) அட்டையைப் பார்த்தால் நூல் அருமை புரியுமர் (You cannot tell a book by its cover)
  • (i) நாய்க்குத் தவிசிட்டால் யானையாகாது (ii)வாள் பிடித்தால் பேடி வீரனாகிவிடமாட்டான் (இ)தங்கப்பூச்சினால் கழுதை குதிரையாகுமர் (The golden covering does not make the ass a horse)
  • ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும் பேனாம். (A clean glove often hides a dirty hand)
  • ஒவ்வொரு மந்தையிலும் கறுப்பாடுகள் இருக்கும் ஒவ்வொரு வகுப்பிலும் வம்பர்கள் இருப்பர். (There are black sheep in every flock)
  • கண்ணால் காண்பதும் பொய். (Appearances are deceitful)
  • கண்ணால் காண்பதே கைக்குக் கிடைக்கும். (What you see is what you get)
  • கோயிலுக்குப் போகிறவன் எல்லாம் பக்தனல்ல. (All are not saints who go to church)
  • நிறைகுடம் தளும்பாது. (Still waters run deep)
  • ருத்திராட்சம் தரித்தால் முனிவனாகிவிட முடியாது (The cowl does not make one a monk)

நடத்தை (MANNERS)

  • உணவு முக்கியம் நடத்தை அதைவிட முக்கியம். (Meat is much but manners is more)
  • தீய நடத்தை துரதிருச்டத்தைக் கொண்டு வரும். (Bad manners bring bad luck)
  • நடத்தையே பெரும்பாலும் அதிர்ஷ்டத்தை உருவாக்கும். (Manners often make fortune)
  • நடத்தையே மனிதர்க்கு உரைகல். (Men are judged by manners)
  • நடத்தையே மனிதனை உருவாக்குகிறது. (Manners maketh a man)

நட்பு (COMPANY)

  • அடிக்கடி நீர் வார்க்க வேண்டிய பயிரே நட்பு. (Friendship is a plant which must be often watered)
  • இருவர் நட்பு மூவர் கும்பல். (Two is company three is crowd)
  • உண்மை நட்பிற்கு அழிவில்லை. (True friendship is imperishable)
  • கெட்ட நட்பைவிடத் தனித்திருப்பது மேல். (Better be alone than in bad company)
  • திடீர் நட்பு தீரா வருத்தம். (Sudden friendship sure repentance)
  • நட்பு எப்போதும் நன்மை தரும் காதல் சில நேரம் துன்பம் தரும். (Friendship always benefits love sometimes injures)
  • நட்பு மகிழ்ச்சியைப் பெருக்கும் துயரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும். (Friendship multiplies joys and divides grief)
  • நட்பைச் சந்தையில் வாங்க முடியாது. (Friendship is not bought at the fair)
  • நண்பர்களை வைத்தே நம்மை எடைபோடுவர், (A man is known by the company he keeps)
  • நண்பனுக்காகத் துயர்பட்டால் இரட்டிக்கும் நட்பு. (Suffering for a friend doubles friendship)
  • நல்ல நண்பருடன் வாழ்க்கையில் நடந்தால் எதுவும் எளிதில் கைகூடும் (Good company upon the road is the shortest cut)
  • நாம் எப்படியோ நம் நண்பர் அப்படியே. (As a man is so his company)
  • நிழல் தரும் மரமே நட்பு. (Friendship is a sheltering tree)
  • நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர் பெருமை நொய்தாகும். (Patched up friendship seldom becomes whole again)
  • பெரியோர் கேண்மை வலிமை சேர்க்கும். (The friendship of the great is fraternity with lions)

நண்பர்கள் (FRIENDS)

  • அறிமுகம் உடையோர் பலராயினும் உற்ற நண்பர் சிலரே வேண்டும். (Have but few friends though many acquaintances)
  • உண்மையான நண்பனே உன்னதச் சொத்து. (A true friend is the best possession)
  • செல்வம் நண்பர்களை ஆக்கும் வறுமை அவர்களைச் சோதிக்கும். (Prosperity makes friends adversity tries them)
  • துரதிருச்டம் நட்பைப் பகையாக்கும். (Misfortune make foes of friends)
  • நண்பர்களுக்கு இடையில் பொதுவுடைமை. (Among friends all things are common)
  • நண்பனைப் பகைவனாகி விடுவானோ என்பது போல் நடத்து. (Treat a friend as if he might become a foe)
  • நண்பன் இல்லா வாழ்க்கை துயரில் பங்கு கொள்ள ஆள் இல்லாத சாவு. (Life without a friend is death without a witness)
  • நண்பன் உதவி கேட்டால் நாளை என்பது இல்லை. (When a friend asks there is no tomorrow)
  • பொய்யான நண்பர்களைவிட தெரிந்த பகைவன் மேல். (Better an open enemy than a false friend)

நம்பிக்கை (BELIEF)

  • (i) கேப்பையில் நெய் வடிந்தது என்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு (ii) எல்லாவற்றையும் நம்புபவன் முட்டாள். (A fool believes everything)
  • (i) நம்பினோர்க்கு நற்கதி (ii) நம்பினோர்க்கு துயர் நாசமாகும். (belief is relief)
  • ஐயமுறுதலே அறிவின் திறவுகோல். (Doubt it’s the key to knowledge)
  • கேட்பதை நம்பவே நம்பாதே காண்பதை பாதி நம்பு. (Believe nothing of what you hear and only half of what you see)
  • டாக்டரை நம்பினால் ஆரோக்கியமானது எதுவும் இல்லை மதவாதியை நம்பினால் பாவமல்லாதது எதுவும் இல்லை சிப்பாயை நம்பினால் பாதுகாப்பானது எதுவும் இல்லை. (If you believe the doctors nothing is wholesome if you believe the theologists nothing is innocent if you believe the soldiers nothing is safe)
  • நம்பாதவன் அழிவான்(கெடுவான்). (Man without belief will perish)
  • நம்பிக்கை மலைகளையும் அசைத்திடும். (Faith will move mountains)
  • நம்புவதிலும் நம்பாததிலும் இல்லை நம்பிக்கை துரோகம் நம்பாததை நம்புவதுபோல் காட்டிக்கொள்வதே நம்பிக்கைத் துரோகம். (Infidelity does not consist in believing or disbelieving it consists in professing to believe what one does not believe)
  • பார்ப்பது நம்புவதற்குச் சமம். (Seeing is believing)
  • முடியும் என்று நம்புபவன் முடித்துக்காட்டுவான். (He can who believes he can)
  • விரும்புவதை விரைவில் நம்புகிறோம். (We soon believe what we desire)

நம்பிக்கை (CONFIDENCE)

  • சமதரப்பு ஒத்துழைப்பு நம்பிக்கை தூண்போல் தாங்கும். (Between you and me and the post)
  • திறமையும் நம்பிக்கையும் வெல்ல முடியாத படை. (Skill and confidence are an unconquered army)
  • நம்பிக்கை நாட்டிடும் உறுதியை. (Confidence carries conviction)
  • நம்பிக்கை வளர நாள் பிடிக்கும். (confidence is a plant of slow growth)
  • வீழாது ஏறும் நம்பிக்கையுடன் வினையாற்று. (Act as if it were impossible to fall)

நம்பிக்கை (FAITH)

  • ஒரு பெண்ணின் நம்பிகைகையைப் பெறக் கற்றுக்கொள். (Learn to win a lady’s faith)
  • காணாப் பொருளின் சான்றாகவும் கருதிய பொருளின் உயிராகவும் இருப்பது நம்பிக்கை. (Faith is the substance of things hoped for the evidence of things not seen)
  • நம்பிக்கை சொர்க்ததைத் தீட்டும் ஆன்மாவின் தூரிகை. (Faith is the pencil of the soul that pictures heavenly things)
  • நம்பிக்கையே வாழ்கையின் உந்து சக்தி. (Faith is the force of life)
  • நாம் நடப்பது நம்பிக்கையால் பார்வையால் அன்று. (We walk by faith not by sight)
  • நேர்மையானவர் நம்பிக்கையால் வாழ்வர். (The just should live by faith)
  • பகுத்தறிவின் நீட்சியே நம்பிக்கை. (Faith is the continuation of reason)
  • விசுவாசமற்ற வேலையே மரணத்திற்கு சமம். (Faith without work is dead)

நம்பிக்கை (HOPE)

  • அளவற்ற நம்பிக்கை அளவில்லாத ஏமாற்றம். (Too much hope deceives)
  • ஆழ்ந்த நம்பிக்கை ஆனந்தம் கொடுக்கும். (Hope well and have well)
  • உயிர் இருக்கும் வரை நம்பிக்கையும் இருக்கும். (While there is life there is hope)
  • ஏழையின் கஞ்சி நம்பிக்கையில் இருக்கிறது. (Hope is poor mans bread)
  • நம்பிக்கை இல்லாவிட்டால் இதயம் வெடித்துவிடும். (If it were not for hope the heart would break)
  • நம்பிக்கையே மனிதனை உயிருடன் வைத்திருப்பது. (Hope keeps man alive)
  • மகிழ்ச்சியில்லாதவர்களை விட்டு விலகும் கடைசிப்பொருள் நம்பிக்கையே. (Hope is the last thing to abandon the unhappy)
  • மிக நல்லது நடக்கும் என நம்பு படுமோசமானதற்குத் தயாராயிரு. (Hope for the best and prepare for the worst)
  • மிக நல்லதே நடக்கும் என நம்புவோம். (Hope for the best)

நல்லது (GOOD)

  • (i) நல்ல பட்டறைக்கல் சுத்தி அடிக்கு அஞ்சாது (ii) நல்லவன் சோதனைக்கு அஞ்சான். (A good anvil does not fear the hammer)
  • (i) நல்லதும் வேகமும் சந்திப்பது அரிது  (ii)நல்லது மெதுவாய்த்தான் நடக்கும் தீயது உடனே நடந்துவிடும். (Good and quick seldom meet)
  • கெட்டதைப் போலவே நல்ல பணியும் உடனடியாகப் பேசப்படும். (A good work is as soon said as a bad one)
  • சிறுசிறு தியாகம் செய்தே நன்னடத்தை பெறமுடியும். (Good manners are made up of petty sacrifices)
  • தீமையை நன்மையால் வெல். (Overcome evil with good)
  • நல்ல அறிவுரை விலை மதிப்பற்றது. (Good counsel has no price)
  • நல்ல குதிரையின் நிறம் மங்காது. (A good horse is never of a bad colour)
  • நல்ல பெயர் இருட்டிலும் ஒளிரும். (A good name keeps its lustre in the dark)
  • நல்ல வேடனை அம்பால் அல்ல குறியால்தான் அறிவர். (A good archer is not known by his arrow but by his aim)
  • நல்லதை இறுகப் பற்று. (Hold fast that which is good)

நற்பண்பு (CHARACTER)

  • (i) காக்கை குளித்தாலும் கொக்காகுமர் (ii) நாயின் வாலை ஒட்ட வெட்டினாலும் நாய்தான், (Cut off a dogs tail and he will still be a dog)
  • (i) தேள் செந்நிறமாய் வளர்ந்தாலும் கொட்டுவது நிற்குமர் (ii) நரி சாம்பல் நிறமாக வளரும் ஆனால் ஒருபோதும் நல்லதாக மாறாது. (The fox may grow grey but never good)
  • (i) நாய் வாலை நிமிர்த்த முடியாது (ii) சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றாது. (The leopard cannot change his spots)
  • (i) புலிக்குப் பிறந்தது பூனையாகாது (ii) வேட்டைப் பருந்து புறாக்குஞ்சு பொறிக்காது. (Eagles do not breed doves)
  • (i) பேய்ச் சுரைக்காயில் நல்ல விதை கிட்டுமர் (ii) விதை எப்படியோ பயிர் அப்படி. (Of evil grain no good seed can come)
  • (i) முடியைப் பொசுக்கிக் கரியாக்க முடியுமர் (ii) பன்றியின் காதால் பட்டுப் பை செய்ய முடியுமர் (You cannot make a silk purse out of sows ear)
  • அறிவிலியாய்ப் பிறந்தவன் ஒருநாளும் அறிஞனாகான். (He that is born a fool is never cured)
  • ஒருமுறை அயோக்கியன் எப்போதும் அயோக்கியன். (Once a knave always a knave)
  • ஒவ்வொரு கல்லையும் அறுக்கும் வைரக்கல்லே நற்குணம். (Character is a diamond which scratches every other stone)
  • செல்வம் இழந்தால் ஒன்றும் இழந்துவிடவில்லை உடல் நலம் இழந்தால் ஏதோ ஒன்று இழக்கப்பட்டது நற்பண்பு இழந்தால் அனைத்தும் இழந்ததாகும். (When wealth is lost nothing is lost When health is lost something is lost When character is lost everything is lost)
  • தன் குணத்தை மறைத்திடுவான் பிறர் குணத்தைப் பிட்டு வைப்பான். (A man never discloses his own charatcter so clearly as he describes anothers)
  • நண்டை நேராக நடக்க வைக்க முடியாது. (You cannot make a crab walk straight)

நன்மதிப்பு (HONOUR)

  • ஆதாயம் சேர்ந்தால் நன்மதிப்பு அகலும். (Honour and profit lie not in one sack)
  • கள்வர்களுக்கிடையேயும் நல்ல மதிப்பு உண்டு. (There is honour among thieves)
  • நன்மதிப்பு நடத்தையை மாற்றும். (Honour change manners)
  • நன்மதிப்பு விழைபவன் நன்மதிப்புக்குரியவன் அல்லன். (He that desires honour is not worthy of honour)
  • நன்மதிப்புடன் ஓய்வு பெறு. (Leisure with honour)
  • நன்மதிப்பும் சுகவாழ்வும் நண்பர்கள் அல்லர். (Honour and ease are seldom bedfellows)
  • நன்மதிப்பை உடைமையாக்கிக் கொள்வதைவிட அதற்குத் தகுதியாவது சிறப்பு. (It is a worthier thing to deserve honour than to possess it)
  • நேர்மையான உழைப்பில்தான் நன்மதிப்பிருக்கும். (Honour lies in honest toil)
  • பெருமதிப்புக்கு உரிய பதவி ஆபத்தான பதவி. (The post of honour is the post of danger)
  • பெரும் பெருமைகள் பெருஞ்சுமைகள். (Great honours are great burdens)

நன்றி (GRATITUDE)

  • (i) ஓடையில் நீர் குடிக்கும்பொழுது ஊற்றை நினை (ii) உப்பிட்டவரை உள்ளளவும் நினை. (When you drink from the stream remember the spring)
  • (i) நன்றியுள்ளவன் கேட்கும்பொழுது பணம் கொடு (ii) நன்றி உடையாருக்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணும் நன்றியில்லாதவனுக்குச் செய்த உதவி நீர்மேல் எழுத்துக்கு நேர். (To a grateful man give money when he asks)
  • சிறு உதவிகளையும் மறக்காதே ஆனால் பெறுந்தவறுகளையும் மறந்துவிடு. (Do not forget even little kindness and do not remember even big faults)
  • மனிதனுக்கே நன்றி சொல்லாதவன் கடவுளுக்கு நன்றி சொல்லமாட்டான். (Who gives not thanks to man gives not thanks to God)

நன்னம்பிக்கை (OPTIMISM)

  • இன்று வீழ்பவன் நாளை எழுவான். (He that falls today may rise tomorrow)
  • தவறோ சரியோ என் நாடு பொன் நாடு. (My country right or wrong)
  • தாய் நாட்டைக் காக்க ஒருமுறை தானே உயிர்விட முடியும்? என்ன அவலம் இது! (What a pity it is that we can die but once to save our country)
  • நாடு உனக்கு என்ன செய்தது என்று கேளாதே நாட்டுக்கு நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டுக்கொள். (Ask not what your country can dor for you or Ask what you can do for your country)
  • வரலாறு இல்லாத நாட்டிற்கு வந்திடும் மகிழ்ச்சி. (Happy is the country which has no history)

நாணயம் (HONESTY)

  • நாணயத்தைப் போன்றதோர் பரம்பரைச் சொத்தில்லை. (No legacy is so rich as honesty)
  • நாணயமானவனின் வார்த்தை உறுதிப்பத்திரம் போன்றது. (An honest mans word is as good as his bond)
  • நாணயமே நனிசிறந்த கொள்கை. (Honesty is the best policy)
  • நாணயம் காலத்துக்கு ஒவ்வாத அற்புத அணிகலன். (Honesty is a fine jewel but much out of fashion)
  • நேர்மையான பார்வைக்குப் பல தவறுகள் மறையும். (An honest look covers many faults)
  • பகிரங்கமாக ஒப்புக்கொள்வது ஆன்மாவுக்கு நல்லது. (Open confession is good for the soul)

நாய் (DOG)

  • (i) உறங்கும் நாய் உறங்கட்டும் (ii) தூங்குகிற போக்கிரி தூங்கட்டும். (Let the sleeping dog lie)
  • இரவில் செய்தது பகலில் தோன்றும்(வெளி வரும்). (What is done by night appears by day)
  • இருண்ட நாளும் இனிது விடிந்திடும் எக்கவலைக்கும் முடிவுண்டு. (The darkest day will have passed away)
  • இன்பமும் களிப்பும் மிகுந்த நாட்கள் நீண்டவையல்ல. (They are not long the days of wine and roses)
  • இன்று வருவது நாளை போகும். (What a day may bring a day may take away)
  • கிழ நாய்க்குப் புதிய தந்திரம் கற்பிப்பது போல. (Teaching an old dog new tricks)
  • குரைக்கிற நாய் கடிக்காது. (A barking dog seldom bites)
  • குரைத்துக் கடித்து மகிழ்ந்திட நாயை அவிழ்த்துவிடு. (Let dogs delight to bark and bite)
  • நாளை நன்றாகத் தொடங்கினால் நாம் வருந்த வேண்டியதில்லை. (Begin the day well and have no regrets)
  • நாளோ சிறிது நடக்க வேண்டிய வேலை பெரிது. (The day is short and the work is much)
  • நிலத்தின் மீது கட்டியிருப்பது நிலத்தோடு போகும். (That which is built upon sand goes with the land)
  • நிலம் (LAND)
  • நிலம் வைத்திருப்பவன் கூலியாட்களும் வைத்திருக்க வேண்டும். (He that hath some land must have some labour)
  • பல பறவைகளுக்குக் குறி வைப்பவன் ஒன்றையும் வீழ்த்தமாட்டான். (Dogs that pursue many hares kill none)
  • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும். (Every dog has his day)
  • வாரிசுகள் இல்லாமையால் நிலம் தொலைந்ததில்லை. (Land was never lost for want of heirs)

நீதி (JUSTICE)

  • அதீத நீதி அதீத அநீதியே. (Extreme justice is extreme injustice)
  • அநீதியின் கொடிய வடிவே பழிக்குப் பழி. (Revenge is a wild form of injustice)
  • ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நீதி (சமநீதி). (Whats sauce for the goose is sauce for the gander)
  • உச்சிமீது வான் இடிந்து வீழினும் நீதியை நிலைநாட்டு. (Let justice be done through heavens fall)
  • தாமதித்த நீதி மறுக்கப்பட்ட நீதி. (Justice delayed is justice denied)
  • நீதியைக் கருணையால் பக்குவப்படுத்து. (Temper justice with mercy)

நுல்கள் (BOOKS)

  • ஆலோசகர்கள் மழப்பினாலும் நூல்கள் உள்ளதை உள்ளபடி உரைக்கும். (Books will speak plain when counsellors blanch)
  • இன்றும் என்றும் நல்ல புத்தகம் உத்தம நண்பன். (A good book is the best of friends the same for today and forever)
  • என்றும் இறவாதது நூல்கள் ஒன்றே. (A book is the only immortality)
  • ஒரு நல்ல புத்தகம் தலைசிறந்த ஆன்மாவின் விலைமதிப்பற்ற உயிர்த்துடிப்பு. (A good book is the precious life blood of a master spirit)
  • சட்டங்கள் மாறலாம் நூல்கள் மாறாது. (Laws die books never)
  • நூல்களிலும் காதலிலும் மனம் ஓர் இலக்கையே நாடும். (In books and love the mind pursues one end)
  • படிக்கும்படி இருப்பதே நூலின் முக்கியத் தேவை. (Of all the needs a book has the chief need is that it is readable)

நேர்மை (JUST)

  • நேர்மையற்ற சமாதானத்தினும் நேர்மையான போர் மேலானது. (A just war is better than an unjust peace)
  • நேர்மையாளனை மனதில் பொன்போல் வைப்பர் பொதிந்து கொடுமையாளனை மனதில் வையார் மண்போல் வீசி எறிந்து. (Only the memory of the just is blessed but the name of the wicked shall not)
  • வள்ளல் ஆவதற்கு முன் நேர்மையாளனாய் இரு. (Be just before you are generous)

பகுத்தறிவு (COMMON SENSE)

  • பகுத்தறிவு ஓர் இயல்பான உணர்வு அது அதிகம் இருந்தால் பேரரறிஞன். (Common sense is an instinct and enough of it is genius)
  • பகுத்தறிவுக் கூர்வாள் பலன்தரும் கொடையே. (Sword of common sense our surest gift)
  • பகுத்தறிவைப் பரவலாகப் பார்க்க முடிவதில்லை. (Common sense is very uncommon)

பகைவன் (ENEMY)

  • எலி போல் தோன்றும் பகைவனையும் புலிபோல் எண்ணு. (Though thy enemy seems a mouse yet watch him like a lion)
  • சமரசம் செய்த பகைவரிடம் கவனமாய் இரு. (Take heed of reconciled enemies)
  • நண்பனைப் பற்றி நல்லன சொல். பகைவனைப் பற்றி ஏதும் சொல்லாதே. (Speak well of your friend of your enemy say nothing)
  • பகைவனை நட்பாக்கிக் கொள். (Make your enemy your friend)
  • பத்து நண்பர் நன்மையைக் காட்டிலும் ஒரு பகைவன் தீங்கு பெரிது. (One enemy can do more hurt than ten friends can do goods)
  • புதிய நண்பனையும் பழைய பகைவனையும் நம்பாதே. (Trust not a new friend nor an old enemy)

படுக்கை (BED)

  • (i) தன்வினை தன்னைச் சுடும் (ii) வினை விதைத்தவன் வினையறுப்பான் தினை விதைத்தவன் தினையறுப்பான். (As one makes ones bed so must one lie on it)
  • அந்தியில் படுக்கச்செல் வைகறையில் துயில் எழு. (Go to bed with the lamb and rise with the lark)
  • மனிதன் நடுங்கும் பகைவருள் முதன்மையானதும் மோசமானதும் படுக்கை ஒன்றே. (Of all the foes that man should dread the first and last is the bed)
  • வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கை அன்று. (Life is not a bed of roses)
  • விரைவில் உறங்கி விரைவில் எழுபவன் ஆரோக்கியமும் செல்வமும் அறிவும் அடைவான். (Early to bed and early to rise makes a man healthy wealthy and wise)

பழக்க வழக்கம் (CUSTOM)

  • பண்டைய பழக்கம் சட்டத்திற்கு நேர், (Ancient custom has the force of law)
  • பழக்க வழக்கத்தைக் கடைப்பிடிப்பதைவிட மீறுவதாலே அது பெயர்பெறுகிறது. (It is a custom more honoured in the breach than the observance)
  • பழக்க வழக்கமே ஈட்டிய சுபாவம். (Custom is the second nature)
  • பழக்க வழக்கம் வாழ வைக்கும் சட்டம் சீர் குலைக்கும். (With custom we live well but law undo us)

பழக்கம் (FAMILIARITY)

  • (i) கோயில் பூனை தேவருக்கு அஞ்சாது (ii) கோயிலருகே இருப்போர் கடவுளைக் கேலி செய்வர். (Those near the temple deride the gods)
  • (i) பழகப் பழக மரியாதை குறையும் (ii) பழகாதவரிடம் மதிப்பு மாறும். (Respect is greater from a distance)
  • மலியும் பொருள்களுக்கு மவுசு குறையும். (Goods that are much on show lose their colour)
  • வளர்வதைக் காண்பவன் வருந்தி உழைப்பான். (No man gears what he has seen grow)

பழக்கம் (HABIT)

  • தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். (Old habits die hard)
  • பழக்கங்கள் முதலில் ஒட்டடைகள் பிறகு கம்பி வடங்கள். (Habits are first cobwebs than cables)
  • பழக்கம் வலுவான காற்சட்டை. (A habit is a shorts made of iron)
  • மனிதர்கள் பலவற்றைப் பகுத்தறிவால் செய்யாமல் பழக்கத்தாலேயே செய்கின்றனர். (Men do more things through habit than through reason)
  • முயன்று இயல்பாவதே பழக்கம். (Hard is a second nature)

பறவை (BIRD)

  • (i) பறப்பதைவிட இருப்பது மேல். (ii) புதரில் இருக்கும் இரு பறவைக்கு கையில் ஒரு பறவை மேல். (A bird in the hand is worth two in the bush)
  • அதிகாலை எழுபவள் அதிலாபம் பெறுவாள். (The early bird catches the worm)
  • அழகிய இறக்கைகள் படைக்கும் அற்புதப் பறவைகளை. (Fair feathers make fine birds)
  • இனம் இனத்தோடு சேரும். (Birds of the same feather flock together)
  • ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்தல். (To kill two birds with one stone)
  • கூவும் இசையால் பறவையை அறி கொடுக்கும் வாக்கால் மனிதனை அறி . (A bird is known by its note the man by his words)

பாசாங்கு (HYPOCRISY)

  • ஆலயம் செல்லும் அனைவரும் புனிதர் அல்லர். (All are not saints that go to church)
  • இயல்பலாதன செய்யேல். (Be what you would seem to be)
  • கெட்டவர் உபதேசிக்கும் பொழுது நல்லவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (When the fox preaches then beware of your geese)
  • தீய செயல்களை அழகிய வார்த்தைகள் மூடி மறைக்கும். (Fine words dress ill deeds)
  • போலிப் புனிதம் இரட்டை அநீதி. (Pretended holiness is double iniquity)
  • வெட்ட விரும்பும் கரத்தையே முத்தமிடுவோர் பலர். (Many kiss the hand they wish to cut off)
  • வெண்ணெய் திருடும்போது பூனை கண்ணை மூடிக்கொள்ளும். (The cat shuts its eye while it steals cream)

பாதி (HALF)

  • (i) அரைக் கிணறு தாண்டுவதை விடத் தாண்டாதிருப்பது மேல் (ii) பாதி செய்வதைவிட செய்யாதிருப்பது மேல். (Half done is worse than not done)
  • ஒன்றும் இல்லாததற்கு அரை ரொட்டி மேல். (Half a loaf is better than none)
  • பாதி உலகுக்கு மீதி உலகு எப்படி வாழ்கின்றது என்பது தெரியாது. (Half the world knows not how the other half lives)
  • முழுசை விடப் பாதி பெரிது. (The half is more than the whole)

பிறத்தல் (BORN)

  • (i) கணங்கணம் இறப்பான் மனிதன் கணம் கணம் பிறப்பான் ஒருவன். (Every moment dies a man every moment one is born)
  • சுதந்திரமாய்ப் பிறந்த மனிதன் எங்கும் தளைப்பட்டிருக்கிறான். (Man is born free and everywhere he is in chains)
  • பிறந்த மாத்திரத்திலே மனிதன் இறக்கத் தொடங்குகிறான். (As soon as a man is born he begins to die)

புகழ் (FAME)

  • (i) செல்வத்தைவிட உயர்ந்தது புகழே (ii) இசைபட வாழ்தலின் ஊதியமில்லை. (A good name is better than riches)
  • இறவாமையின் மெல்லிய நிழலே புகழ். (Fame is the thin shadow of eternity)
  • எந்தப் பிரசாரமும் நல்ல பிரசாரமே. (Any publicity is good publicity)
  • நல்ல முகத்தைவிட நல்ல புகழே மேல். (Good fame is better than good face)
  • புகழெனின் உயிரையும் கொடு. (Give thy life for fame)
  • புகழ் அடையப் பல வழியுண்டு. (There are many ways to fame)
  • புகழ் ஒரு பூதக்கண்ணாடி. (Fame is a magnifying glass)
  • மக்கள் ஆதரவு புகழாகாது. (Fame is not popularity)
  • மக்கள் ஏமாளிகள் என்பதற்குப் புகழே சான்று. (Fame is proof that people are gullible)
  • வீரச் செயல்கள் வீசும் நறுமணமே புகழ். (Fame is the perfume of heroic deeds)

புகார் (COMPLAINT)

  • (i) கல்மேல் குற்றஞ்சாட்டுபவன் தடுக்கி விழுவான் இருமுறை (ii) கடல்மேல் பழிபோடுபவனின் கப்பல் இருமுறை உடையும். (He who complains wrongfully of the sea twice suffers ship wreck)
  • வழக்கறிஞரின் உடையில் வரும் புகார்கள் பொய்களாகும். (Complaints are lies in court clothes)

புதர் (BUSH)

  • (போரில் சுடும்பொழுது) திறந்தவெளிக்கு ஒரு மோசமான புதரே மேல். (A bad bush is better than the open field)
  • நல்ல சாராயத்தைப் புதர் மறைவில் விற்க வேண்டியதில்லை. (Good wine needs no bush)

பூ (FLOWER)

  • (i) ஒரு மலர் மாலையாகாது (ii) தனிமரம் தோப்பாகாது. (One flower makes no garland)
  • ஆயிரம் பூக்கள் மலரட்டும். (Let a thousand flowers bloom)
  • மலருடன் கூறு. (Say it with flowers)
  • மலர்களைச் சேகரி மொட்டுகளை விட்டுவிடு. (Gather the flowers but spares the buds)
  • மலர்களைத் தேடினால் மலர்களைக் காண்பான். (He who hunts for flowers will find flowers)
  • மலர்கள் வார்த்தைகள் குழந்தைக்குக் கூடப் புரியும் வார்த்தைகள். (Flowers are words which even a baby may understand)

பூனை (CAT)

  • அப்பன் குதிருக்குள் இல்லை என்றானாம். (To let the cat out of the bag)
  • அறியும் ஆவலில் அக்குவேறு ஆணிவேறானதாம் பூனை. (Curiosity killed the cat)
  • கையுறை அணிந்த பூனை எலி பிடிக்காது. (A cat in gloves catches no mice)
  • கோயில் பூனை கடவுளுக்கு அஞ்சாது. (The temple cat does not fear for the deity)
  • பூனை மன்னனைக் காண முடியும். (A cat may look at a king)
  • பூனைக்கு ஒன்பது வாழ்க்கை. (A cat has nine lives)

பெரியது (GREAT)

  • உலக வரலாறு என்பது மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறே. (The history of the world is nothing but the biographies of great men)
  • எந்தப் பெரிய மனிதனும் பயனின்றி வாழ்வதில்லை. (No great man lives in vain)
  • பெரிய மரமே காற்றைக் கவரும். (A great tree attracts the wind)
  • பெரிய மனிதர்கள் ஒரே மாதிரி சிந்திப்பர். (Great men think alike)
  • பெரியவனாக இருப்பதென்பது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவது. (To be great is to be misunderstood)
  • மாமனிதர்களாகப் பிறக்கிறார்கள் சிலர் சிலர் மாபெறும் மனிதர்களாக ஆக்கப்படுகிறார்கள் சிலர் மாபெறும் மனிதத்தனம் திணிக்கப்படுகிறது. (Some are born great some are made great and greatness is thrust upon some)

பெரும்பான்மை (MAJORITY)

  • சட்டத்தோடு ஒன்றியிருப்பதே பெரும்பான்மை. (One with law is majority)
  • பெரும்பான்மை கையில் அதிகாரம். (Majority has authority)
  • பெரும்பான்மையே வலிமை. (The majority has the might)

பெறுதல் (HAVE)

  • எதிர்ப்பை வரவேற்பதில் முந்து. (Have a chip on ones shoulder)
  • கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. (You can not have your cake and eat it too)

பேய் (DEVIL)

  • தன் நோக்கம் நிறைவேறச் சாத்தான் கூடச் சாத்திரம் பேசுவான். (The devil can cite scriptures for his purpose)
  • பேயின் பங்கைக் பேய்க்குக் கொடு. (Give the devil its due)
  • பேயின் வீட்டில் பேய் வராது. (Devil cannot come in devils house)
  • பேயை நினைத்த மாத்திரத்தில் வரும். (Think of the devil and he is there)
  • பேய்க் குணம் கொண்டவனே தீயதை நினைப்பான். (No man means evil but the devil)

பேராசை (GREED)

  • (i) அனைத்துக்கும் ஆசைப்படு அனைத்தையும் இழ (ii) பேராசை பெரு நட்டம். (All covet all lose)
  • தங்க முட்டையிடும் வாத்தைக் கொன்று விடாதே. (Kill not the goose that lays the golden eggs)
  • பிச்சைக்காரர்களின் பைகளுக்கு அடிகாண முடியாது. (Beggars bags are bottomless)
  • பேராசைக்காரர்களுக்குக் கை நீளம். (Greedy folks have long arms)

பொய் (LIE)

  • ஒரு பொய்யை மெய்யாக்கப் பல பொய் வேண்டும். (One lie makes many)
  • ஒன்று நிச்சயம் வாழ்க்கை பறக்கிறது மீதி பொய்யே. (One thing is certain that life flies the rest lies)
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டும். (Though a lie be well dressed it is ever overcome)
  • புள்ளி விவரம் பொய் சொல்லாது ஆனால் பொய்யர் புள்ளி விவரம் சொல்வர். (Figures will not lie but liars will figure)
  • பொய்கள் விரைவாய் பரவும். (Lies follow by post)
  • பொய்யர்க்குச் சிறந்த ஞாபக சக்தி வேண்டும். (Liars should have good memory)

பொறாமை (ENVY)

  • (i) பொறையுடையார் வெற்றியடைவார் (ii) பொறுத்தார் பூமியாள்வார். (He conquers who endures)
  • ஒரு தவறுக்கு அடி பணிந்தால் மற்றொன்றைக் கூட்டி வரும். (The submitting to one wrong brings another)
  • ஒவ்வொரு துயருக்கும் பொறுமையே தீர்வு. (Patience is remedy for every grief)
  • நிரம்பி வழிவதற்கு முன் கோணியைக் கட்டு. (Bind the sack before it be full)
  • நிரம்பிய நீர் வழிந்துதான் போகும். (When the well is full it will run over)
  • பிறரைச் சுட முயலும் பொறாமை தன்னையே சுட்டுக் கொள்ளும். (Envy shoots at others and wounds herself)
  • பொறாமை என்றும் மனிதனைச் செழிப்பூட்டியதில்லை. (Envy never enriched a man)
  • பொறாமை தன் மீதே பொறாமைப்படும். (Envy envies itself)
  • பொறாமை பார்வையைக் கூராக்கும். (Nothing sharpens sight like envy)
  • பொறாமைப்படுபவன் தன் தாழ்வைத் தானே ஒப்புக்கொள்கிறான். (He who envies admits his inferiority)
  • பொறாமையும் சோம்பலும் மணந்தால் பெறுவது விநோதம். (Envy and idleness married together beget curiosity)
  • பொறுத்திரு காத்திரு. (Bears and forbear)
  • பொறுமை ஒரு நற்பண்பு. (Patience ia a virtue)
  • பொறுமைக்கம் ஓர் எல்லையுண்டு. (An ass endures his burden but not more than this burden)
  • போகாத வலியைப் பொறுத்துத்தான் ஆக வேண்டும். (What cannot be cured must be endured)

போர் (BATTLE)

  • போரில் தோல்வியை அடுத்தாற்போல் போரில் வெற்றி துயரமிகத் தரும். (Next to battle lost the greatest misery is battle gained)
  • போரில் நியாயமும் பொதுமக்கள் கருத்தும் பாதி வெற்றிக்குச் சமம். (In war the moral element and public opinion are half the battle)
  • முதல் தாக்குதல் பாதி வெற்றி. (The first blow is half the battle)

போலித் தற்பெருமை (CONCEIT)

  • (i) குறை குடம் கூத்தாடும் நிறை குடம் நீர் தளும்பாது (ii) தன் பெருமையைத் தம்பட்டமடிப்பவன் எதையும் செய்ய மாட்டான். (They can do least who boast loudest)
  • ஒருபோதும் தற்பெருமையைப் பீற்றாதே குழந்தையிலிருந்து உன்னைஅறிந்தவர் அங்கு எதிர்ப்படக் கூடும். (Never be boastful someone may pass who know you as a child)
  • தம் புகழைத் தாம் பாடாதார் இல். (Every bird loves to hear himself sing)
  • தன்னை விடவும் தற்புகழ்ச்சிக்கு ஆளில்லை. (There is no such flatterer as a mans self)
  • படோடாபத்திற்கு மயங்காத ஆளில்லை. (Men love to hear well of themselves)
  • வாய்ச்சொல் வீரர் செயல்வீரர் ஆகார். (Great braggers little doers)

மகள் (DAUGHTER)

  • (i) விரும்பியபோது மகனுக்கு மணம் முடி (ii) முடியும் போதே மகளுக்கு மணம் முடித்திடு. (Marry your son when you will your daughter when you can)
  • சொற்கள் மண்ணின் புதல்விகள் (அவை காட்டும் பொருட்கள் விண்ணின் புதல்வர்கள். (Words are the daughters of earth and things are the sons of heaven)
  • நூலைப் போலச் சேலை தாயைப் போல பிள்ளை. (Like mother like daughter)

மகிழ்ச்சி (HAPPINESS)

  • அடுப்பு அனலில் ஆனந்தம் வளர்கிறது. (Happiness grows at ones fireside)
  • எல்லா உவகையும் உள்ளத்தின் உள்ளே. (All happiness is in the mind)
  • ஒரு விருந்து ஒரு வீடு ஒரு நிம்மதியான மகிழ்ச்சி. (One feast one house one mutual happiness)
  • தான் சொன்ன நல்லதை எல்லாம் செய்தவன் மகிழ்வான். (Happy is the man who does all the good he talks of)
  • நளினமாய் நடனம் ஆடுவோர் எல்லாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. (All are not merry that dance lightly)
  • நாள் நீளும் வரை நீளும் மகிழ்ச்சி போல. (As merry as the day is long)
  • நிறைய செல்வம் நீண்ட மகிழ்ச்சி. (The more the merrier)
  • பெருத்த மகிழ்ச்சி பேராபத்து. (Great happiness great danger)
  • பை செல்வத்தால் நிறைவதை விட மனம் மகிழ்ச்சியால் நிறைவது மேல். (A happy heart is better than a full purse)
  • மகிழாத உள்ளம் ஏழை உள்ளமே. (It is a poor heart that never rejoices)
  • மகிழ்சியான இதயம் நாளெல்லாம் நன்கு இயங்கும். (A merry heart goes all the day)
  • மகிழ்ச்சி கிடைத்ததும் தீர்த்துவிடாதே. (Possessed of happiness don’t exhaust it)
  • மகிழ்ச்சி பொறாமையை வரவழைக்கும். (Happiness invites envy)
  • மகிழ்ச்சியாக விருந்தளிப்பவன் சந்தோசமான விருந்தாளிகளைப் பெறுவான். (A merry host makes merry guests)
  • மகிழ்ச்சியாகவும் புத்திசாலியாகவும் இரு. (Be merry and wise)
  • மகிழ்ச்சியாயிருப்பவருக்கு சேவை செய்பவனே மகிழ்ச்சியாக இருப்பான். (Happy is he that serves the happy)
  • மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துபவனே உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறான். (He is truly happy who makes others happy)
  • முடிந்த பொழுது மகிழ்ச்சியாயிருந்து விடு ஏனெனில் நீ நீண்ட காலமாக இறக்கும் நிலையிலுள்ளாய் (பிறந்ததுமே சாவு நிச்சயம்). (Be happy when you can for you are a long time dead)

மகிழ்ச்சி(உற்சாகம்) (CHEERFULNENSS)

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும். (A merry heart maketh a cheerful countenance)
  • கடந்தகால மகிழ்ச்சி எதிர்கால நம்பிக்கை. (Cheerful yesterdays and confident tomorrows)
  • உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள் படுமோசமானது இனிமேல்தான் இருக்கிறது. (Cheer up the work is yet to be)
  • இன்பச் சிரிப்பே இல்லத்தின் ஒளி. (A good laugh is sunshine in the house)
  • வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். (Hearty laugh dispels disease)

மரணம் (DEATH)

  • (i) அரசனும் சாவான் ஆண்டியும் சாவான் (ii) மரணம் யாரையும் விட்டு வைக்காது. (Death spares neither pope nor beggar)
  • (i) மரணம் நாட்காட்டி பார்க்காது (ii) மரணத்திற்கில்லை நாளும் கோளும். (Death keeps no calendar)
  • அனைத்தின் முடிவே மரணம். (Death is the end of all)
  • அனைவருக்கும் மரணம் வருவது நிச்சயம். (Death is sure to all)
  • ஆயத்தம் செய்யாதவனுக்கு அனைத்தும் திடீர் மரணமே. (All death is sudden to the unprepared)
  • இடுகாட்டில் உலவும் இறவாச் சமரசம். (We shall lie all alike in our grave)
  • இறந்தவரை ஏசாதே. (Never speak ill of the dead)
  • சாவு சாக்குப்போக்கைக் கேளாது. (Death will hear of no excuse)
  • சாவு தமுக்கடித்துக்கொண்டு வராது. (Death does not blow a trumpet)
  • திடீர்ச் சாவே நல்ல சாவு. (A sudden death is the best)
  • நம்பிக்கைகளுக்கு இடையே மரணம் நம்மைத் திடுக்கிட வைக்கும். (Death surprises us in the midst of our hopes)
  • மரணம் எல்லாக் கடனையும் அடைத்திடும். (Death pays all debt)
  • மரணம் நம் நல்லதை இழக்கச் செய்வதைவிட உண்மையில் கெட்டதிலிருந்து விடுவிக்கும். (Death rather frees us of ill than robs us of our good)
  • மருத்துவரை எதிர்த்து நின்றிடும் மரணம். (Death defies the doctor)
  • மனிதன் ஒருமுறை மட்டுமே சாவான். (A man can die but once)
  • முடியும் விதம் நல்ல மரணம் காட்டிடும். (The end maketh a good death)
  • முதல் மூச்சே மரணத்தின் தொடக்கம். (The first breath is the beginning of death)

மலர் (BLOSSOM)

  • அழகு வெறும் வசந்தகாலத்து மலரேயாகும். (Beauty is but a summer time blossom)
  • மலர்கள் பூத்தால் வசந்தம் தொடங்கும். (Blossom by blossom the spring begins)
  • வீண்பெறுமை பூக்கிறதே தவிரக் காய்ப்பதில்லை. (Vain glory blossoms but never bears)

மறந்துவிடுதல் (FORGET)

  • நன்றல்லது அன்றே மறப்பது நன்று. (Forget evils immediately)
  • நன்றி மறப்பது நன்றன்று. (Forget not the help you receive)
  • மறக்க வேண்டும் என்பதால் மறக்கிறோமே தவிர தானாகவே மறப்போம் என்பதால் இல்லை. (We forgot because we must and not because we will)
  • மன்னிப்பதை விட மறப்பது நன்று. (Good to forgive best to forget)
  • மன்னிப்போம் மறப்போம். (Forgive and forgot)

மன நிறைவு (CONTENTMENT)

  • (i) திருப்தியுறாதவனுக்கு எது இருந்தாலும் இல்லைதான் (ii) போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. (He has nothing that is not contented)
  • (i) கட்டின இடத்தில்தான் ஆடு மேய வேண்டும் (ii) கிணற்று மீன் சமுத்திரத்தில் நீந்த முடியாது. (The goat must browse where she is tied)
  • அதிருப்தியே முன்னேற்றத்தின் முதற்படி. (Discontent is the first step in progress)
  • அற்ப மனிதர்களுக்கு அற்ப விசயங்கள் பெரியவை. (little things are great to little man)
  • இக்கரைக்கு அக்கரை பச்சை, (The grass is always greener on the other side of the fence)
  • உள்ளதைக்கொண்டு திருப்தி அடைந்தவன் உலகத்தில் இல்லை. (No man is content with his lot)
  • எளிய இதயங்களுக்கே எளிய ஆசைகள். (Humble hearts have humble desires)
  • குறைவானதற்குத் திருப்தியடைவதே நிறைவான செல்வம். (The greatest wealth is contentment with a little)
  • கையில் இருக்கும் மாவைக்கொண்டுதானே அப்பம் சுட வேண்டும். (A man must plough with such oxen as he has)
  • பெறமுடியாததற்கு ஏங்க மாட்டான் புத்திசாலி. (A wise man cares not for what he cannot have)
  • போதுமானது கையிலிருந்தால் போகத்திற்குக் குறைவில்லை. (He is at ease who has enough)
  • மிச்சம் வைக்காத இடத்தில் எதுவும் நிரம்பாது. (There was never enough where nothing was left)

மனிதன் (MAN)

  • ஆணுக்கு தன் உறுதியுண்டு பெண்ணிற்குத் தன் வழியுண்டு. (Man has his will but woman has her way)
  • ஐந்து வயதில் மனிதனாயிருப்பவன் 15 வயதில் முட்டாளாவான். (A man at five may be a fool at fifteen)
  • ஒருமுறை மட்டுமே மனிதன் இறப்பான். (A man can die but once)
  • குழந்தைகளுக்கு இடையே மனிதன் விரைவில் குழந்தையாய் விடுவான். (A man among children will become a child)
  • சிறுவன் எப்படி மனிதன் அப்படி. (As the boy so the man)
  • நாளையும் உயிர் வாழ்வோம் என்று நினைப்பவனை தவிர வயோதிகன் எவனும் இல்லை. (No man is so old but thinks he may live another day)
  • நோயைவிடப் பரிகாரம் மோசமாக இருக்கிறது. (The remedy is worse than the disease)
  • பிறவிப் புத்திசாலி எவனும் இல்லை. (No man is born wise)
  • மனிதர்கள் வளர்ந்த பிள்ளைகளே. (Men are but children of larger growth)
  • மனிதனே விவகாரங்களின் நாயகன். (Man is the master of things)
  • மனிதன் ஒரு சமுதாய விலங்கு. (Man is a social animal)
  • மனிதன் ஓர் உத்தம விலங்கு. (Man is a noble animal)

மன்னிப்பு (FORGIVENESS)

  • உன்னைத் தவிர எல்லோரையும் மன்னித்துவிடு. (Forgive all but not yourself)
  • குற்றவாளிகளை மன்னிப்பது மக்களுக்கு இழைக்கும் மாபாதகம். (Mercy to the criminal may be cruelty to the people)
  • சிறு தவறுகளைப் பார்க்காதே. (Wink at small faults)
  • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். (Let bygones be bygones)
  • நியாயத்தினும் கருணை மேம்பட்டது. (Mercy surpasses justice)
  • பிறரை மன்னிப்பவனைக் கடவுள் மன்னிக்கிறார். (God forgives him who forgives others)
  • மன்னிப்பதை விடத் தவம் வேறில்லை. (There is no austerity like forgiveness)
  • மன்னிப்பவனே வெற்றி பெறுகிறான். (He that forgives gains victory)
  • மன்னிப்பு குற்றவாளிகளை உற்பத்தி செய்யும். (Pardon makes offenders)

மாற்றம் (CHANGE)

  • அடிக்கடி வேலை மாறுபவன் அதிகம் சாதிக்கமாட்டான். (A rolling stone gathers no moss)
  • இடையறா மாற்றம் முன்னேற்றத்தின் அறிகுறி (Constant change is a sign of progress)
  • உலகம் எப்போதும் மாறிக்கொண்டிருக்கிறது. (The world is always changing)
  • காலம் மாறிப்போனால் ஆளும் மாறிப்போவான். (Times change and we with them)
  • பழமையைப் பாதுகாத்திடு புதுமையை அறிந்திடு. (Preserve the old but know the new)
  • புதிய மதுவை பழைய குப்பிகளில் அடைக்க முடியாது. (you cannot put new wine into old bottles)
  • புதுமை எப்பொழுதும் அழகாய்த் தோன்றும். (Novelty always appears handsome)
  • மாற விரும்புவது பாதுகாப்பின் அறிகுறி. (The desire for change is a sign of safety)
  • மாறும் தன்மை ஒன்றே மாறாது என்றும் நிற்கும். (There is nothing permanent except change)
  • மாற்றமே இயற்கையின் நியதி. (Change is the law of nature)

மீன் (FISH)

  • (i) மீன் பிடித்த பின் வலைக்கு என்ன வேலை? (ii) காரியம் முடிந்த பின் கவனிப்பார் இல்லை. (When the fish is caught the net is laid aside)
  • தரையில் தவிக்கும் மீன் போல. (Like a fish out of water)
  • புழுவைப் போட்டால் தான் மீனைப்பிடிக்க முடியும். (You must lose a fly to catch a fish)
  • மீன் எப்பொழுதும் தூண்டில் பின்தான் செல்லும். (Fish follows the bait)
  • வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு. (To fish in troubled waters)

முகத்துதி (FLATTERY)

  • அளவுமீறி முகத்துதி செய்பவன் அநியாயமாய்க் கண்டனமும் செய்வான். (Beware of one who flatters unduly he will also abuse unjustly)
  • ஒரு பாராட்டுக் கடிதம் இன்னொன்றையும் கேட்கும். (One complimentary letter asks another)
  • போலியே முகத்துதியின் மெய்யான உருவம். (Imitation is the sincerest form of flattery)
  • முகத்துதி செய்பவனுக்கு விரோதிகள் இல்லை. (No foe to a flatterer)
  • முகத்துதி செய்வது எளிது திருப்திப்படுத்துதல் கடினம். (It is easy to flatter but hard to please)
  • முட்டாள்களின் உணவு முகத்துதியே. (Flattery is the food of fools)
  • வெறும் பேச்சு தூக்கி எறியப்படும் முகத்துதி சிம்மாசனத்தில் அமர்த்தப்படும். (Flattery sits in the parlour when plain speaking is kicked out of doors)

முகம் (FACE)

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும். (Face is the index of the mind)
  • அழகிய முகமே ஒரு சிபாரிசு கடிதம் தான். (A beautiful face is a letter of recommendation)
  • அழகிய முகம் ஓர் அதிர்ஷ்டம். (A pretty face is a fortune)
  • அறியா முகங்கள் பொது இடங்களில் அழகானவை அறிவுடையவை அறிந்த முகங்கள் தனி இடங்களில் அப்படி இல்லை. (Private faces in public places are wiser and nicer than public faces in private places)

முடியாதது (IMPOSSIBLE)

  • அது முடியாததாகையால் அதுவே நிச்சயம். (It is certain because it is impossible)
  • கடவுளின் கருணை இருந்தால் முடியாதது எதுவும் இல்லை. (If Gods touch is there nothing is impossible)
  • முட்டாள்களின் அகராதியில்தான் முடியாது என்ற சொல்லிருக்கும். (The word impossible is in the dictionary of fools)

முடிவு (END)

  • இலட்சியத்தை அடைவதில் நேர்மை வேண்டும். (The end must justify the means)
  • இலட்சியம் மட்டும் போதாது அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். (Whoever wills the end wills also the means)
  • நல்லன யாவும் கூட ஒரு முடிவுக்கு வந்தே தீரும். (All good things must come to an end)
  • கப்போக எல்லாம் சரியாகும். (In the end things will mend)
  • முடிவிலிருந்தே நாம் தொடங்குகிறோம். (The end is where we start from)
  • முடிவு நம் கையில் இல்லை இறைவன் கையில். (It is divinity that shapes our ends)

முட்டாள் (FOOL)

  • (i) முட்டாள்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் (ii) முட்டாள்கள் முற்றிலும் மடிந்து விடவில்லை. (All the fools are not dead yet)
  • அருவருப்பான உண்மையை அடிமுட்டாளைத் தவிர யாரும் கூற மாட்டார்கள். (None but a fool will tell distasteful truth)
  • அர்த்தமற்ற பேச்சே அடிமுட்டாள் பேச்சு. (A pointless saying is a fools doing)
  • உலகில் முட்டாள்கள் பாதி அயோக்கியர்கள் மீதி. (Knaves and fools divide the world)
  • எளிதில் முட்டாளாகுபவன் அயோக்கியனின் கருவி. (An easy fool is a knaves tool)
  • கழுதையைப் பார்த்துக் கத்துபவன் கழுதையாவான். (As ass let him be who brays at an ass)
  • குழந்தையும் முட்டாளும் உண்மை விளம்பிகள். (Children and fools tell the truth)
  • செய்யாதே என்பதை முதலில் செய்வான் முட்டாள். (Frobid a fool a thing and that he will do)
  • சொல்வதையெல்லாம் யோசித்துச் சொல்பவன் புத்திசாலி நினைத்ததை எல்லாம் சொல்பவன் முட்டாள். (A wise man thinks all that he says a fool says all that he thinks)
  • தன் நிழலோடு தானே சண்டையிடுவான் முட்டாள். (A fool fights with his own shadow)
  • தேவதை அடியெடுத்து வைக்க அஞ்சுமிடத்தில் முட்டாள் வேகமாக நுழைவான். (Fools rush in where angles fear to tread)
  • நாற்பது வயதிலும் முட்டாள் உண்மையாகவே முட்டாள்தான். (A fool at forty is a fool indeed)
  • பாட்டில்லாமல் கூத்தாடுபவனே முட்டாள். (A fool can dance without a fiddle)
  • பைத்தியமும் முட்டாளும் சாட்சியாக மாட்டார்கள். (A mad man and a fool are no witnesses)
  • முட்டாளின் பணம் விரைவில் அவனைப் பிரிந்து விடும். (A fool and his money are soon parted)
  • முட்டாளுக்கு வழங்கப்படும் அறிவுரை ஒரு காதில் நுழைந்து மறு காதில் வெளியே வந்துவிடும். (Advice to a fool goes in one ear and comes out of the other)
  • முட்டாளுக்கே அதிர்ஷ்டம் அடிக்கும். (Fools for luck)
  • முட்டாளுடன் சேர்ந்து சிரிப்பதைவிட அறிவாளியுடன் சேர்ந்து அழுவது மேல். (Better to weep with a wise man than to laugh with a fool)
  • முட்டாளும் மௌனியானால் அறிவாளி. (A fool if he holds his tongue passes for wise)
  • முட்டாளைக் கடை வீதிக்கு அனுப்பினால் முட்டாளாகவே திரும்புவான். (Send a fool to the market and a fool he will return)
  • முட்டாள் தன் மண்டையை உடைத்துக்கொள்ளத்தானே தடி எடுப்பான். (A fool brings a staff to beat his own head)
  • முட்டாள் பிடித்த சட்டி விரைவில் சூடாகும். (A fools bolt is soon hot)
  • முட்டாள் மற்றவர்களையும் முட்டாளாக்குவான். (A fool fools others)
  • முட்டாள்களின் உபதேசம் முக்தி தராது. (A fools sermon gives no solution)

முட்டாள்தனம் (FOLLY)

  • (i) சரசுவதி இருக்குமிடத்தில் லட்சுமி இருந்திடாள் (ii) மதி மீது காதல் நிதி தராது. (Love of wit makes no man rich)
  • (i) முட்டாள்தனம் ஒரு தீராத நோய் (ii) முட்டாள்தனத்தைப்போல் தீராத நோய் இல்லை. (The malady that is most incurable is folly)
  • ஆசைகள் முட்டாள்தனமானவை. (Mere wishes are silly fishes)
  • உலர்ந்த நிலத்தில் மூழ்குவது முட்டாள்தனம். (It is folly to drown on dry land)
  • எரியும் வீட்டை அணைக்கக் கிணறு தோண்டுவது போல. (To dig a well to put out a house on fire)
  • கழுதைகளுக்கு இடையே உதைகளைத் தவிர வேறென்ன நிகழும்? (Nothing passes between asses but kicks)
  • குறுகிய கால முட்டாள்தனம் சாலச் சிறந்தது. (The shortest follies are the best)
  • செவிடன் காதில் சங்கூதுவது முட்டாள்தனம். (It is folly to sing twice to a deaf man)
  • பாதுகாப்புக்கு அறிவுறை கூறி சுய பாதுகாப்பை அசட்டை செய்வது முட்டாள்தனம். (To counsel and disregard his own safety is folly)
  • மற்றவர் முட்டாள்தனத்தில் ஆதாயம் தேடு. (It is well to profit by folly of others)

முதல் (FIRST)

  • (i) புறங்கூறாதவனே நல்ல நண்பன் (ii) நேசனைக் காணாவிடத்து நெஞ்சாரத் துதி. (He is a good friend that speaks well of us behind our back)
  • என் முதுகைச் சொறிந்தால் உன் முதுகைச் சொறிந்து விடுவேன் (You scratch my back and I will scratch yours)
  • பந்திக்கு முந்து படைக்கு ப் பிந்து. (First to the dining table last to the battle field)
  • பெண்களுக்கு முதல் இடம். (Ladies first)
  • முதலில் சிந்தி பிறகு பேசு. (First think and then speak)
  • முதலில் சோதி பின்னர் நம்பு. (First try and then trust)
  • முதல் அபிப்பிராயமே சிறந்த அபிப்பிராயம். (First impression is the best impression)
  • முதன்மையானதற்கு முதலிடம் கொடு. (First thing first)
  • முதுகு முறியும் வரைதான் சுமையைத் தாங்க முடியும். (A man may bear till his back breaks)
  • முந்தி வந்தவனுக்கு முதலில் சோறு. (First come first served)
  • விதியின் விளையாட்டை யாரால் வெல்ல முடியும்? (Destiny with men for pieces plays and one by one back in closet lays)

முதுமை (AGE)

  • (i) கிழநாய் வித்தை கற்காது (ii) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமர் (இ) இளமையில் கல்லாதது முதுமையில் வராது. (An old dog will learn no tricks)
  • கிழ நரிக்குத் தந்திரம் கற்க வேண்டுமா. (An old fox needs no craft)
  • கிழ வேடன் வலைவிரிப்பதில் கெட்டிக்காரன். (An old poacher makes the best keeper)
  • குறுகிய மனித வாழ்வில் காலத்தை வீணாக்காதே! (In the short life of man no lost time can be afforded)
  • தன்னை ஆள்பவன் எண்பதிலும் இளையவன் தன்னை ஆளாதவன் முப்பதில் முடிவான். (A man as he manages himself may die at thirty or be young at eighty)
  • நன்கு வாழ்பவன் நெடிது வாழ்வான் இளமையில் திருந்தாதவன் முதுமையில் தள்ளாடுவான். (He lives long that lives well He that corrects not youth controls not age)
  • பல்லில்லாத கிழவனும் பச்சிளம் குழந்தைதான். (An old man is twice his child)
  • முதியோர் வாக்கு பொய்ப்பது அரிது. (An old mans sayings are seldom untrue)
  • முதுமை எண்ணுகிறது இளமை துணிகிறது. (Age considers youth ventures)
  • முதுமை எரிச்சலூட்டும் விருந்தாளி. (Old age is a troublesome guest)
  • முதுமை துன்பம் தரும் சக பயணி. (Age is a sorry travelling companion)
  • முதுமை பக்குவத்தின் அடையாளம். (Age is a symbol of maturity)

முயற்சி (DILIGENCE)

  • உழைப்பும் ஊக்கமும் உண்டாக்கும் திறமையை. (Diligence makes an expert workman)
  • உழைப்பே அதிர்ஷ்டத்தின் தாய். (Diligence is the mother of good fortune)
  • உழைப்பே ஆரோக்கியம். (A little labour much health)
  • உழைப்பைப் போல் ஓர் ஆசான் இல்லை. (Diligence is a great teacher)
  • கடையை நடத்தினால் கடை உன்னை நடத்தும். (Keep your shop and the shop will keep you)
  • கவனமும் முயற்சியும் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும். (Care and diligence bring luck)
  • சுறுசுறுப்பானவனுக்கு வாரத்தில் இன்றே ஏழு நாள் சோம்பேறிக்கு ஏழு நாளும் நாளையே. (For the diligent the week has seven today for the slothful seven tomorrows)
  • தேனீ இல்லையேல் தேன் இல்லை வேலை இல்லையேல் பணம் இல்லை (No bees no honey no work no money)
  • வருத்தம் இன்றேல் நட்டம். (No pain no gain)
  • வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை. (No sweet without sweat)

முன்னறிவு (FORESIGHT)

  • தாகம் வரும் முன் கிணறு வெட்டி விடு. (Dig a well before you are thirsty)
  • மழை தொடங்குமுன்னே ஓட்டையை அடை. (Thatch your roof before the rain begins)
  • முன்னெச்சரிக்கை ஒரு பாதுகாப்புக் கவசம். (Forewarned is forearmed)
  • மோசமான நிலைமைக்குத் தயாராகு நல்ல நிலை தானே தன்னைக் காத்துக்கொள்ளும். (Provide for the worst the best will save itself)
  • வருமுன் அறிபவன் புத்திசாலி. (He is wise who looks ahead)

மெழுகுவர்த்தி (CANDLE)

  • (i) பிற விளக்குகளை ஏற்றித் தன்னையே அழித்துக்கொள்வதே மெழுகுவர்த்தி (ii) பிறர்க்கு உதவி தன்னைத் தியாகம் செய்வதே மெழுகுவர்த்தி. (A candle lights others and consumes itself)
  • வேதாளத்திற்கு விளக்குப் பிடித்தது போல, (To hold a candle to a devil)

மேகம் (CLOUD)

  • ஒவ்வோர் இன்னலும் மின்னல் கீற்றென நன்மை கொண்டது. (Every cloud has a silver lining )
  • சந்தேகத்திற்கு ஆளாகு. (To be under a cloud)

மேதைமை (GENIUS)

  • கடின வேலையைத் தவிர்க்கும் திறமையே மேதைமை. (Genius is the capacity of evading hard work)
  • மேதைமை பைத்தியம் போன்றது. (Genius is akin to madness)
  • மேதைமை முக்கியமாக சக்தியின் தொழிலே. (Genius is mainly an affair of energy)
  • வாழ்க்கை விளக்கைவிட மேதமை விளக்கு அதிக வேகமாக எரிகிறது. (The lamp of genius burns more rapidly than the lamp of life)

மேன்மையானது (BETTER)

  • ஒரு போதும் செய்யாதிருப்பினும் தாமதமாகச் செய்வது மேல். (Better late than never)
  • காதலிக்காமல் இருப்பதைவிட காதலித்து தோல்வியுறுவது மேல். (It is better to have loved and lost than never to have loved at all)
  • குற்றம் புரியாத ஒருவன் துன்பப்படுவதைவிட குற்றம் புரிந்த பத்துபேர் தப்புவது மேல், (Better ten guilty escape than one innocent man suffer)
  • கெட்ட நண்பர்களைவிட உதைபடுவதே மேல், (Better to be beaten than to be in bad company)
  • கெட்டதை நினைப்பதைவிட ஏதும் நினையாமை மேல். (Better unthought than ill thought)
  • கொள்வதைவிடக் கொடுப்பது மேல். (Better to give than to take)
  • நடைமுறைப்படுத்தப்படாத சட்டம் இருப்பதைவிட சட்டமே இல்லாமல் இருப்பது மேல். (Better no law than law not enforced)
  • நாளை கிடைக்கும் பலாக்காயினும் இன்று கிடைக்கும் களாக்காய் மேல். (Better an egg today than a hen tomorrow)
  • நீண்ட நாள் வாழ்வதைவிட நன்றாக வாழ்வதே மேல். (Better to live well than to live long)
  • பிற்பாடு கடுந்துயர் அடைவதைவிட தற்போது துயரமடைவது மேல். (Better bad now than worse later)
  • வருந்துவதைவிட உறுதியாய் இருப்பது மேல். (Better be sure than sorry)
  • வாட்டிக்கொள்வதைவிட மகிழ்வது மேல். (It is better to merry than to burn)

வஞ்சகம் (DECEIT)

  • ஏமாற்றுபவனுக்கு வாய் சர்க்கரை கை பொக்கரை. (Deceivers have full mouth and empty hands)
  • ஏமாற்றுபவனை ஏமாற்றுதல் ஏமாற்றன்று. (To deceive a deceiver is no deceit)
  • ஒருமுறை ஏமாற்றுபவன் எப்போதும் சந்தேகிக்கப்படுவான். (He that once deceives is ever suspected)
  • கடவுளை வஞ்சிக்க நினைப்பவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொண்டவன். (Who thinks to deceive god has already deceived himself)
  • நம்பிக்கைத் துரோகி நரகம்சேர் பாவி. (Deceiving those that trust us is more than a sin)
  • நம்பிக்கையே ஏமாற்றின் தாய். (Trust is the mother of deceit)

வம்பு (GOSSIP)

  • கிசுகிசு வார்த்தைகள் நெடுந்தொலைவு கேட்கும். (Whispered words are heard afar)
  • கிசுகிசுப்பவன் இரண்டு வீட்டை அழித்திடுவான். (Who chatters to you will destroy two houses)
  • தீ நாக்கு செய்யும் தீமை அனைத்தும். (An ill tongue may do much)
  • வம்பளப்பு மறைமுகமாக அனுபவிக்கப்படும் ஒரு தீமை. (Gossip is a vice enjoyed vicariously)
  • வம்பனை நம்பாதே. (Put no faith in tale bearers)

வராமை (ABSENCE)

  • (i) பூனை புறம்போனால் எலி கூத்தாடும் (ii) தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன். (When the cats away the mice will play)
  • அரிதாகப் பார்ப்பவை விரைவாக மறந்துபோம். (Seldom seen soon forgotten)
  • அவையின் நீங்கினால் அக்கறையும் நீங்கிடும். (Far from court far from care)
  • இல்லாததற்கே ஏங்கிடும் இதயம். (Absence makes the heart grow fonder)
  • கண்ணில் படாதது மனதிலும் படாது. (Out of sight out of mind)
  • கண்ணிற்கு எட்டாவிட்டால் இதயத்திற்கும் எட்டாது. (Far from eye far from heart)
  • காற்று மெழுகுவர்த்தியை அணைக்கும் நெருப்பை மூட்டும் பிரிவு அற்பஉணர்வைத் தேய்க்கும் பேருணர்வைப் பெருக்கும். (Absence diminishes little passions and increases great ones as the wind extinguishes candles and kindles fire)
  • நெருப்புக்குக் காற்றுபோலக் காதலுக்குப் பிரிவு. (Absence is to love what wind is to fire)
  • பிரிவு காதலின் ஆர்வத்தை அதிகரிக்கும் வருகை வலுப்படுத்தும். (Absence sharpens love presence strengthens it)
  • மேல் விழுந்து பூசிக்கொண்டால் மேவாது நட்பு. (Friends agree best at a distance)
  • வாராது இருப்போர் வழிமுறை பேணார். (Never were the absent in the right)

வருதல் (COME)

  • அலைந்து அடிபட்டு ஆரம்பத்திற்கே மீண்டும் வந்தோம். (The wheel has come full circle)
  • அழையா விருந்தாளிக்கு அறுசுவை விருந்தா கிடைக்கும்? (He who comes uncalled sits unserved)
  • மழையோ வெயிலோ வருவது வரட்டும். (Come rain come shine)
  • மேலிருந்து வருவதை மறுத்துவிடாதே. (That which cometh from above let no man refuse)
  • வந்தது வரட்டும் எதுவருமென்று யாருக்குத் தெரியும்? (Come what may is to come is to come is still unsure)
  • வல்லான் வகுத்ததே வாய்க்கால். (Might is right)

வாக்குவாதம் (ARGUMENT)

  • (i) காரணம் சிறிதானால்  சொல் தோரணம் பெரிதாகும் (ii) வார்த்தைகள் கடுப்பாகவும் கசப்பாகவும் இருந்தால் காரணம் வலுவற்றது. (Strong and bitter words indicate a weak cause)
  • அறிவாளிகள் காரணத்தை ஆய்ந்து கொண்டிருப்பார்க்ள் முட்டாள்கள் முன்னின்று முடிவெடுப்பார்கள். (Wise men argue causes and fools decide them)
  • செத்த பாம்பை அடிக்கும் வீரமே வாய் வீரம். (To flog a dead horse)
  • மற்போர் இடுவோர்க்கு மயிற்பீலி உதவாது சொற்போர் இடுவோர்க்கு உவமைகள் உதவா. (In arguments similes are like songs in love they describe much but prove nothing)
  • முகம் சுளிக்கும் வாதமே மோசமான உரையாடல். (Argument is the worst sort of conversation)
  • வாதம் பேசல் எளிது பேதம் இன்றி உரையாடல் அரிது (Many can argue not many can converse)

வாய்ப்பு (OPPORTUNITY)

  • (i) வாழ்க்கை சுகபோகமானதன்று (ii) வாழ்க்கை ரோசா மலர்ப் படுக்கை அன்று. (Life is not a bed of roses)
  • ஆயுளால் வாழ்க்கை அளக்கப்படுவதில்லை. (Life is not measured by the time we live)
  • சிறு சிறு விசயங்களால் ஆனதே வாழ்க்கை. (Life is made of little things)
  • நல்ல வாழ்க்கை சுருக்கங்களை வரவழைப்பதில்லை. (A good life keeps off wrinkles)
  • நீண்ட வாழ்க்கையில் துயரமும் தொடரும். (A long life hath long miseries)
  • நெடிய வாழ்க்கையும் நொடிகளின் பகுதிகளே. (The longest life is but a parcel of moments)
  • நெடுநாள் வாழ்பவன் கொடுந்தீமை கடக்க வேண்டும். (He who lives a long life must pass through much evil)
  • வாய்ப்பு இரு தரம் கதவைத் தட்டாது. (Opportunity seldom knocks twice)
  • வாழ்க்கை ஆரம்பமாவது நாற்பதிலே. (Life begins at forty)
  • வாழ்க்கை என்ன என்று தெரிந்து கொள்வதற்குள் பாதி வாழ்க்கை கழிந்து விடுகிறது. (Life is half spent before one knows what life is)
  • வாழ்க்கை ஒரு புனிதப் பயணம். (Life is a pilgrimage)
  • வாழ்க்கை குறுகியதே ஆனாலும் இனிது. (Life is short yet sweet)
  • வாழ்க்கையில் பயணம் செய்கையில் வழியிலும் வாழ்ந்து காட்டுவோம். (As we journey through life let us live by the way)
  • வாழ்வோ குறுகியது காலமோ விரைகிறது. (Life is a short and time is swift)

வாழ்தல் (LIVE)

  • காலத்திற்காக வாழாதே நின்று நிலைப்பதற்கா வாழ். (Live not for time but eternity)
  • காலத்திற்கேற்ப நன்கு வாழ்வதே அதிகம் வாழும் வழியாகும். (The way to live much is to live well betimes)
  • நன்றாக வாழ்பவன் தொலைநோக்கு உடையவன். (Who lives well sees afar off)
  • நெடிது வாழ்பவன் நிறையப் பார்ப்பான். (Those who live longest will see most)
  • மகிழ்ச்சியை மறந்திருக்கும் காலம் வரை வாழ்த்தவர்களே நீண்ட காலம் வாழ்ந்தவர்கள். (They live too long whose happiness outlive)
  • வாழு வாழ விடு. (Live and let live)
  • வாழ்கிறவர்கள் காண்பார்கள். (Who lives will see)

விசுவாசம் (LOYALTY)

  • (i) நாய் நாயைத் தின்னுமர் (ii) மனிதன் மனிதனை தின்று பிழைத்திடலாமர் (Dog does not eat dog)
  • இரு எசமானர்களின் கீழ் எவரும் வேலை செய்ய முடியாது. (No man can serve two masters)
  • ஒரு திருடன் இன்னொரு திருடனிடம் திருடமாட்டான். (One thief will not rob another)
  • முயலோடு ஓடுபவன் நாய் கொண்டு வேட்டையாட முடியாது. (You cannot run with the hare and hunt with the hound)
  • விசுவாசமே பணத்தினும் மதிப்பு வாய்ந்தது. (Loyalty is worth more than money)

விடா முயற்சி (PERSEVERANCE)

  • அமைதியான வாழ்க்கை பெற எதையும் விட்டுக்கொடுக்கலாம். (Compromise anything for a quiet life)
  • உடைவதைவிட வளைவதுமேல் (Better bend than break)
  • ஊருடன் ஒத்து வாழ். (Do in rome as the romans do)
  • மிகச் சிறந்தவை கடின உழைப்பாலேயே வரும். (The best things are hard to come by)
  • முயலுடன் சேர்ந்தால் ஓடிப்போ நாயுடன் சேர்ந்தால் வேட்டையாடு. (To run with the hare and hunt with the hounds)
  • விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும். (Perseverance kills the game)
  • விட்டுக்கொடுத்தல் (COMPROMISE)

விபத்து (ACCIDENT)

  • (i) கட்டுப்பாடு மிகும் குடும்பங்களில் கட்டவிழும் விபத்துகள் (ii)கட்டுப்பாடுகள் மிகுந்தால் விபத்துகள் நேரும். (Accidents will occur in the best regulated families)
  • சிலர் பெருமை பிறப்பால் வரும் சிலர் பெருமை சாதனையால் வரும் சிலர் பெருமை பிறர் திணிப்பால் வரும். (Some are born great some achieve greatness and some have greatness thrust upon them)
  • முனைப்பான விளைவுகளே விபத்துகள் ஆகும். (Accidents are outstanding effects)

விருந்தோம்பல் (HOSPITALITY)

  • எளிய நோன்புணவு (பட்டினி கிடக்கையில் உண்ணும் கஞ்சி). (Lenten fare)
  • கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு கல் எறியக்கூடாது. (People who live in glass houses should not throw stones)
  • சிறிதளவு கணப்பும் சிறிதளவு உணவும் பேரளவு அமைதியுமே நல்விருந்தாகும். (Hospitality consists in a little fire a little food and an immense quiet)
  • நல்வரவை நலிவடையச் செய்யாதே. (Do not wear out your welcome)
  • நல்விருந்து ஓம்புபவனின் விருந்தாளி விருந்தோம்பலைக் கற்றுக்கொள்வான். (The guest of the hospitable learns hospitality)
  • முகமலர்ந்து உபசரிப்பதே நல்விருந்து. (Welcome is the best dish)
  • வரவேற்புக்கு உரியவன் நல்விருந்தாளியாவான். (He that is welcome fares well)
  • வீட்டுப் குப்பையை வெளியே போட்டுக் கிளறாதே! (Do not wash your dirty linen in public)

விளக்கு ஒளி (LIGHT)

  • (i) வறுமை இதயத்தை கனக்கச் செய்கிறது (ii) கனமில்லாத பணப்பை இதயத்தைக் கனமாக்குகிறது. (A light purse makes a heavy heart)
  • ஒளி இருக்கையில் நட இல்லையேல் இருள் சூழ்ந்துவிடும். (Walk while you have light lest darkness comes upon you)
  • ஒளி இருளில் ஒளிர்கிறது இருள் அதைப் புரிந்துகொள்வதில்லை. (The light shines in darkness and the darkness comprehends it not)
  • சூழ்ந்த காரிருளில் விளக்கே அன்புடன் நடத்திச்செல். (Lead kindly light amid the encircling gloom)
  • முதுமையிருப்பதன் பொருள் இதயத்தில் ஞான ஒளி பெற்றுள்ளாய் என்பதாகும். (Perhaps being old is having lighted room inside your heart)

வீடு (HOME)

  • ஆங்கிலேயன் வீடு அவனுக்குக் கோட்டை. (An englishman’s home is his castle)
  • இதயங்கள் இன்றி இல்லம் இல்லை. (Without heart there is no home)
  • இதயம் இருக்கும் இடமே இல்லம். (Home is where the heart is)
  • இல்லத்தினும் சிறந்த நல்லிடம் இல்லை. (There is no place like home)
  • எலி வளை ஆனாலும் தனி வளை நன்று. (East or west home is best)

வீரம் (COURAGE)

  • அச்சம் அபாயத்திலிந்து தப்ப வைக்கும் ஆனால் வீரம் அதில் உறுதுணை ஆகும். (Fear can keep a man out of danger but courage can support him in it)
  • அதிர்ஷ்ட தேவதை வீரனையே அரவணைப்பாள். (Fortune favours the bold)
  • அழகை அடையும் தகுதி வீரனை தவிர வேறு யாருக்கு? (None but the brave deserve the fair)
  • உண்மை வீரனுக்கு உயிர் வெறும் துரும்பே. (To the real hero life is a mere straw)
  • பேரிடர் வீரனுக்கு உரைகல் ஆகும். (Calamity is the touch stone of a brave mind)
  • மனமுறிவு (விரக்தி) கோழையும் வீரனாக்கும். (Despair gives courage to a coward)
  • மார்பில் விழுப்புண் பெறுபவனே வீரன். (A brave mans wounds are seldom on his back)
  • விவேகத்திலும் வீரம் அருஞ்செயல் புரியும். (Great things are done more through courage than wisdom)
  • வீரமும் விடா முயற்சியும் அனைத்தையும் வெல்லும். (Courage and perseverance conquer all before them)
  • வீரமும் விவேகமும் மனிதனின் மாபெறும் பண்புகள். (Courage and wisdom are the greatest virtues of man)
  • வீரம்மிக்க புத்துலகே தீரம்மிக்க மக்களையுடையது. (O brave new world that has such people in it)
  • வீரனுக்கு வாள் தேவையில்லை. (A man of courage never wants weapon)
  • வீரனே காப்பாற்றுவான். (The brave will save)
  • வீழ்ந்தாலும் வீரன் அடி பணிய மாட்டான். (A brave man may fall but he cannot yield)

வீரன் (HERO)

  • எவனும் தன் தாதனுக்கு வீரன் இல்லை. (No man is a hero to his vale)
  • எவனும் தன் மனைவிக்கு வீரனல்ல. (No man is a hero to his wife)
  • சண்டையில் வீரனாய் இரு. (Be a hero in the strife)
  • தோற்கும் நேரம் வீரர்கள் உண்டாக்கப்படுகிறார்கள். (Heroes are made in the hour of defeat)
  • வீரர்கள் உண்டாக்கப்படுகிறார்கள் பிறப்பதில்லை. (Heroes are made not born)

வீழ்ச்சி (FALL)

  • (i) இன்று வீழ்பவன் நாளை எழவான் (ii) இன்று தோற்றவன் நாளை செயிப்பான். (He that falls today may rise tomorrow)
  • உயர்வாகப் பார் தாழ்வாக வீழ். (Look high and fall low)
  • எழுவதற்கே வீழ்கிறோம் மேலும் நன்றாக் முயலவே தோல்வியடைகிறோம் விழிக்கவே உறங்குகிறோம். (We fall to rise are baffled to fight better sleep to wake)
  • ஒன்று பட்டால் உண்டு வாழ்வே ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே. (United we stand divided we fall)
  • வீழ்ச்சி வரும் பின்னே கர்வம் வரும் முன்னே. (Pride goes before a fall)

வெறுப்பு (CONTEMPT)

  • துன்பத்தைப் பொறுத்துக்கொண்டாலும் வெறுப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாது. (Many can bear adversity but few contempt)
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும். (Familiarity breeds contempt)
  • மரியாதை கொடுதது மரியாதை வாங்கு. (He that respects not is not respected)
  • முகஞ்சுளிப்பவனுக்கு நல்வரவில்லை. (Never was a scornful man well received)
  • வெறுப்பைக் காட்டுவதே கண்டனத்தின் அறிகுறி. (Contempt is the sharpest reproof)

வெறுப்பு (HATRED)

  • அன்பைப் போல் வெறுப்பும் குருடே. (Hatred is blind as well as love)
  • ஆழமாக நேசிப்போர் ஆழமாக வெறுக்கவும் செய்வர். (They that too deeply love too deeply hate)
  • காதலும் வெறுப்பும் உடன்பிறப்புகள். (Love and hate are blood relations)
  • பழைய வெறுப்பு சலிப்புறாது. (Old hate never wearies)

வேற்றுமைகள் (DIFFERENCES)

  • (i) ஓர் உலகைப் படைக்க அனைத்து வகைகளும் தேவை (ii) நல்லது கெட்டது நாலும் சேர்ந்தது இந்த நானிலம். (It takes all sorts to make a world)
  • அவனவனுக்கு அவனவன் ருசி. (Every one to his taste)
  • ஆகாதவனை அழித்திட ஆயிரம் முறையுண்டு. (There are many ways to kill a dog than hanging it)
  • எல்லோரையும் திருப்திப்படுத்திட முடியுமர் (You cannot please everyone)
  • ஒரு ஊருக்குப் போகப் பல வழி உண்டு. (There are more ways to the wood than one)
  • ஒருவன் விரும்பாததை மற்றவன் விரும்புவான். (If one will not another will)
  • ஒவ்வவொரு காலுக்கு ஒவ்வொரு காலணி. (Every shoe fits not every foot)
  • ஒவ்வொரு தம்பதியும் சோடியாகாது. (Every couple is not a pair)
  • மனங்கள் ஒரே மாதிரியானால் வகைகள் விலைபோகா. (If minds were alike goods would age in the shop)
  • மனிதர் பலராயின் கருத்துப் பலவாம். (So many men so many opinions)

வைத்திரு (KEEP)

  • அதிகம் வரும்வரை கொஞ்சம் வைத்திரு. (Keep some till more comes)
  • நீ வியாபாரத்தைக் கவனி உன்னை வியாபாரம் கவனிக்கும். (Keep your shop and your shop will keep you)
  • பானையில் உலை கொதிக்கும்படி பணம் சம்பாதி. (Keep the pot boiling)
  • வாயை மூடிக்கொள் கண்களை அகலமாய்த்திற. (Keep your mouth shut and your eyes open)